Monday, September 19, 2011

ஸ்கிப்பிங் – Skipping Rope - கயிறு தாண்டுதல்




கயிறு தாண்டுதல் - ஸ்கிப்பிங் – Skipping Rope



அறிமுகம்

ஒரு உடற்பயிற்சி உங்களது உடம்பை கட்டுகோப்பாகவும், அதே நேரத்தில் நீங்கள் அதை விரும்பி செய்ய முடியும் என்றால் அதில் ஸ்கிப்பிங்கும் ஒன்று.

ஸ்கிப்பிங் என்றால் பொதுவாக நாம் குழந்தை பருவத்தில் விளையாட்டு மைதானத்தில் விளையாடியது தான் நினைவுக்கு வரும். இது மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை பயிற்சிக்கு தொடர்புடையதாகவும்  உள்ளது.
இது நமக்கு செலவு வைக்காத, எங்கும் எந்நேரத்திலும், நம் விருப்பப்படி தனித்தோ நம் குழந்தைகளோடோ, உறவினர் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து செய்ய கூடிய பயிற்சி.
குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய முடியவில்லையே என்று வருத்தம் வேண்டாம். அவர்களோடு எண்ணி, பாடிக் கொண்டே ஸ்கிப்பிங் செய்வதும் படுத்துக் கொண்டு முட்டியில் அவர்களை வைத்து முட்டியை மடக்கி மடக்கி தூக்கி விளையாடுவது அவரகளுக்கு ரொம்பவும் பிடிக்கும், உடம்பும் மெலியும்.

உங்களால் ஓட்டப்பயிற்சி செய்ய முடியாவிட்டால், தொடர்ந்து அரை மணி நேரம் படியேறி இறங்குதல் அல்லது ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம்.

"ஸ்கிப்பிங்' செய்யும் போது, காலுக்குப் பொருந்தாத ஷூ அணிந்தால், உங்கள் முட்டியை பதம் பார்த்து விடும். வீட்டிலேயே ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். முதல் இரண்டு நாள் செய்வதற்குத் தயக்கமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. இது நிச்சயமாக பெரிதும் உடல் எடை குறைவர்தற்க்கும் உதவி செய்யும்.

நீளம் தேர்வு செய்ய

கயிற்றை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கயிற்றில் சரியான நீளம் தேர்வு செய்ய, நீங்கள் கயிற்றில் மத்தியில் கால்களை வைக்க வேண்டும் மற்றும் அக்குள் வரை இரு முனைகளும் உயர்த்த வேண்டும்.



வகைகள்

சாதாரண தாண்டல் ( Basic Jump )


கயிறு கீழே வரும் பொழுது ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும் தூக்கி குதிப்பது.

மாற்று தாண்டுதல் ( Alternate Jump )
கயிறு கீழே வரும் போது ஒரு காலால் மாற்றி மாற்றி தாண்ட வேண்டும்.


பின்னி தாண்டல் ( Criss Cross )
இது சாதாரண தாண்டுதல் போன்று தான் ஆனால் இடது மற்றும் வலது கைகளை குறுக்காக பின்னி மாற்றி மாற்றி குதித்து தாண்ட வேண்டும்.


ஓர சுற்றல் ( Side Swing )
கயிரை இடது மற்றும் வலது பக்க வாட்டில் மாற்றி மாற்றி சுற்றியவாறு இரு கால்களையும் தூக்கி குதிக்க வேண்டும்.


முன்-பின் பின்னி தாண்டுதல் ( Front-back cross )
இது பின்னி தாண்டுதல் போன்றுதான், ஆனால் ஒரு கையை பின்னால் குறுக்காக வைக்க வேண்டும்.


இருமுறை தாண்டல் ( Double Under )
இதற்க்கு நீங்கள் இன்னும் சற்று உயரமாக குதித்து கயிரை இரு முறை சுற்ற வேண்டும்.மூன்று முறை சுற்றி குதிப்பவர்களும் இருக்கிறார்கள்.


பல பேர் தாண்டல் ( Combination Jump )
ஒரே கயிற்றில் இருவர் விளையாடலாம். மேற்கூறியபடி இரண்டு கால்களால்  கயிற்றைத் தாண்ட வேண்டும். அதே போல் இருவரும் ஒரே நேரத்தில் குதிக்க வேண்டும் , கயிற்றைத் தாண்ட வேண்டும். போடப்படும் கயிறு இரண்டாமவரையும் சேர்த்து சுற்றி வர வேண்டும். அதனால் இது விளையாடும் போது கயிற்றைப் பிடித்து இருப்பவர்  உயரமாகவும், மற்றவர் குள்ளமாக இருந்தால் நன்றாக் விளையாடலாம். இதுவே மாறி இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.
கயிற்றின் இரு முனைகளை ஆளுக்கொரு முனையாக நீளவாக்கில் பிடித்துக் கொள்ள வேண்டும். இதில் 4 பேர் விளையாடலாம். ஆளுக்கு ஒரு நிறம். சிவப்பு,
மஞ்சள், நீலம்,பச்சை. யார் கயிற்றைப் பிடிக்க  வேண்டும். யார் முதலில்  கயிற்றில் குதிக்க வேண்டும் என்பதை "சாட் பூட் த்ரீ" போட்டு முடிவு செய்யலாம்.

இருவர் கயிற்றை நீளவாக்கில் பிடித்துக்கொண்டு, "Red Blue Green Yellow" என்று  கூறியபடியே கயிற்றைச் சுற்ற வேண்டும். கயிற்றைத் தாண்டுபவர் கயிற்றில் கால் படாமல் குதிக்க வேண்டும். கயிற்றில் கால் பட்டு  அவர் நின்று விட்டால் கடைசியாக என்ன நிறம் கூறப்பட்டதோ, அந்த நிறத்துக்குரியர் குதிக்கலாம். பெண்கள் தான் அதிகம் இந்த விளையாட்டை விளையாடுவார்கள். நேரம் போவதே தெரியாது.

இன்னும் நிறைய Toad, Scissors, Skier, Bell, போன்ற வகைகளும் இருக்கு.

கயிறு தாண்டுதலுக்கு தேவையான கயிறு பெறுவது ரொம்ப எளிது. துணி காயப் போடுற கயிறு இருந்தாலே போதும். உங்க உயரம் மற்றும் தேவைக்கேற்ப வெட்டிக்  கொள்ளலாம். (அம்மா திட்டினா, எனக்குத் தெரியாதுபா....)

பலன்கள்

  • ஒரு மணி நேர கயிறு தாண்டுதல் 1300 கலோரியை எரித்து விடும்.
  • எடை இழக்க உதவுகிறது
  • எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது
  • ஸ்கிப்பிங் தசைகள், இதயம் மற்றும் நுரையீரல் உறுதிபட அற்புதமான வேலை கொடுக்கிறது.
  • 2 முதல் 5 நிமிடங்கள் வரை கயிறு தாண்டுதல் போன்ற பயிர்ச்சி செய்தால் எலும்பு தேய்மானத்தை தவிர்க்கர்லாம்.
  • மூளைக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்.
  • உடலின் நிலைத்தன்மையை அதிகரிக்கும்.
  • உங்களிடம் ஒருங்கிணைப்பு, மூச்சி பயிற்சி, சுவாச சக்தி மற்றும் திறன், சமநிலை, கால்கள் மற்றும் கைகளின் வேகம், சுறுசுறுப்பு மற்றும் உற்சாகத்தையும் உருவாக்கும்.


குறிப்பு:
மிக அதிக உயரத்தோடு கயிறு தாண்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது கால் மூட்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதய நோயாளிகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி கயிறு தாண்டுதலில் ஈடுபடலாம்.

 
நன்றி.

No comments:

Post a Comment