
ஆட்டுகால் சூப் – Goat Leg Soup

தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கால் - 1 செட்
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 1
- மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
- சீரகத்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
- கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
- தேங்காய் முந்திரி பேஸ்ட் - அரை கப் (விரும்பினால்)
ஆட்டுக்கால்
ஆடுக்காலை தீயில் போட்டு சுட்டெடுக்கவும். கடையிலே அப்படி செய்தும் விற்பார்கள். அப்படி செய்வதால் அதிலுள்ள ரோமம் எல்லாம் உதிர்ந்துவிடும்.
கிளியர் சூப் செய்முறை

வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகம், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் சேர்த்து குக்கரில் வைத்து மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை முக்கால் மணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
அப்படியே மல்லி இலை தூவி பரிமாறினால் சூப்பர் சுவையுள்ள சத்தான கிளியர் சூப் ரெடி.
இதை உணவிற்கு முன்னர் ஸ்டார்ட்டர்(Starter) ஆக பரிமாறலாம்.
கெட்டி சூப் செய்முறை

அதனுடன் அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைத்து கட் செய்த மல்லி இலை சேர்க்கவும்.
எண்ணெயுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து சிவந்ததும் கால் ஸ்பூன் சில்லி பவுடர் சேர்த்து தாளித்து கொட்டினால் கெட்டி சூப் ரெடி.
குறிப்பு
இது பரோட்டா சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
குழந்தைகளுக்கென்றால் மிளகாய் இல்லாமல் மிளகின் அளவை குறைத்துக் கொள்ளவும். அல்லது மிளகு இல்லாமல் கடைசியாக மிளகு தூவி கொடுக்கலாம். அவர்களுக்கு கொடுக்கும் போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்தும் கொடுக்கலாம்.
சளி இருமலுக்கு ஏற்ற மருந்து.
நன்றி.
No comments:
Post a Comment