
முருங்கை – Drumstick – Moringa Oleifera
அறிமுகம்
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர். அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும். எளிதில் உடையும் தன்மை கொண்டது. இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.
சத்துகள்

ஈரபதம்-75.9%, புரதம்-6.7%, கொழுப்பு-1.7%, தாதுக்கள்-2.3%, இழைப்பண்டம்-0.9%, கார்போஹைட்ரேட்கள் 12.5%, தாதுக்கள், வைட்டமின்கள், கால்சியம்-440 மி,கி, பாஸ்பரஸ் 70மி.கி, அயன் 7 மி.கி, வைட்டமின் சி 220 மி.கி, மற்றும் வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில் இருக்கின்றன.


முருங்கை கீரையில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, கால்சியம் சத்துகள் உள்ளன.
மருத்துவ பயன்கள்
இரத்த சோகை

முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
பல் கெட்டிப் படும்.

வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

வயிற்றுக்கு
முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுபடும்.

அடிவயிற்றுவலி, பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்றுவலி போன்றவற்றிற்கு முருங்கைக் கீரைச் சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேலை உண்டு வந்தால் மிகப் பலன் கிடைக்கும்.
முருங்கைக் கீரையினால் தயார் செய்யப்படும் சூரணம், உஷ்ண பேதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

முருங்கைக் கீரையை உருவிய பின் நிற்கும் ஈர்க்குடன் கறிவேப்பிலை ஈர்க்கையும் சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். இக்கசாயம் வயிற்றில் உள்ள பூச்சிகளைப் போக்கும் தன்மையுடையது.

இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்றவற்றைப் போக்கும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை வியாதியை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன் போதிய அளவு எள் சேர்த்துச் சமைத்து உண்டு வர, கடுமையான சர்க்கரை நோய் விலகி, உடல் நலம் பெறும்.

முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
குழந்தைகளுக்கு
முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.
முருங்கைச் சாறு எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கரைத்து குழந்தையானால், அரைச் சங்களவும், பெரியவர்களானால் இரண்டு சங்களவும் கொடுத்தால் சிறிது நேரத்தில் வயிற்று உப்புசம் நீங்கும்.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும்.
உடல் சூடு

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
பெண்களுக்கு
பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும்.

முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்காமலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இவ்விதம் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும்.
இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது. கர்ப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்பட்த்தும்.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
ஆண்களுக்கு
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது.

முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.
முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
தோல் வியாதிகள்

சோரியாசிஸ் உள்ள இடத்தை கிருமி நாசினியால் துடைத்து, முருங்கை விதை ஒரு நாள் ஊற வைத்த தண்ணீரால் கழுவி வந்தால், சோரியாசிஸ் குணமாவதை கண் கூடாக பார்கலாம். அல்லது முருங்கைக் கீரையின் சாறை பிழுந்து தடவி வந்தாலும் சோரியாசிஸ் குறைவதை பார்கலாம்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும்.
காது வலி

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.
வலி வீக்கம்

விதையில் இருந்து எண்ணெய் தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளில் பயன் படுத்தலாம் முருங்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்து பருகிவர காசநோய், கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை தூக்கி எறியாமல் அதனை நசுக்கிப் போட்டு மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால் அசதி நீங்கும்.
குழந்தைகளின் வயிற்று உப்புசம் தணிய முருங்கை கீரைச் சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ள கொடுக்கவும்.

முருங்கைக் கீரைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி, வாதமூட்டுவலி முதலியவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

முருங்கைக் கீரையையும், மிளகையும் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தலைவலிக்குத் தடவ குணம் காணலாம். வீக்கங்களின் மீது பூச, வீக்கம் குறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
ஆஸ்துமா
நன்குபசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கைகாய்களை எடுத்து, இடித்து சாறு பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.

கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
ஆஸ்துமா, மார்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.
புளியேப்பம்

முருங்கைக் கீரையுடன் சிறிது உப்பு கூட்டி நன்கு வறுக்க வேண்டும். கீரை சுருண்டு உப்புடன் சேர்ந்து கருகும். கீரை நெருப்பு பிடிக்கும் வரை வறுத்து, பின் இறக்கி ஆறியதும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியேப்பம் வரும்போது அதில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடியுங்கள். அது சரியாகிவிடும்.
நீர்க்கட்டு
முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரைப் பெருக்கும்.

கண்ணுக்கு
முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.

வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை.
பித்த நீர்

முருங்கைக் கீரையைச் சுத்தமாக ஆய்ந்து, அதை அம்மியில் வைத்துத் தட்டி எடுத்து கையில் வைத்துச் சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் (ஷீக்ஷீ) அரை அவுன்ஸ் எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கலக்கிக் குடிக்க வேண்டும். சிறிது நேரத்தில் பித்த நீர் வாந்தியாக வெளியேறிவிடும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு ஒரு தரம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் செய்ய வேண்டும்.
நாய்க்கடி

முருங்கைக் கீரையோடு இரு துண்டுப் பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு அரைத்துச் செய்யப்பட்ட மருந்து நாய்க்கடி நஞ்சை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
முருங்கைக் கீரையை நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், மேன்மையான ஆரோக்கியத்துடன் வாழலாம், நோய்க்கு ஆட்படாத மனிதனின் முதுமை நிச்சயமாக தள்ளிப் போகும், என்றும் இளமையாய் வாழலாம். என்ன சொல்வது சரிதானே...!

குறிப்பு
முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கும். கீரை வகைகளில் முருங்கை கீரை ஜீரணமாவது கடினம். எனவே இரவு நேரத்தில் முருங்கைக் கீரையை சாப்பிடக் கூடாது.
நன்றி.
No comments:
Post a Comment