செக்ஸ் - போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்!!(18+) – Sex and porno videos.

ஆரம்பத்துல வெறும் ஆசையா/ஆர்வமா ஆரம்பிக்கிற போர்னோ பழக்கம், காலப்போக்குல ஒரு போதைப்பழக்கமா, ஒருத்தர செக்ஸ் போதைக்கு அடிமையாக்கி, அவங்க வாழ்க்கையையே புரட்டிப்போடுற அளவுக்கு மோசமான நிலைக்கு இழுத்துக்கிட்டு போயிடுதாம்.

இந்த பிரச்சினைய, சில நிகழ்கால உதாரணங்களோட அலசியிருக்குற ஒரு குறும்படம் நண்பர் மூலமா எனக்கு அறிமுகமாச்சு. அதைப்பற்றிய ஒரு சிறு முன்னுரையோட, அந்தக் காணொளிய உங்க பார்வைக்கும் எடுத்துக்கிட்டு வரவே இந்தப் பதிவு! வாங்க பார்ப்போம்….

இணைய செக்ஸ் போதைக்கு அடிமையான இருவர், போர்னோகிராஃபியை ஒரு ஆரோக்கியமான விஷயமாய்ப் பார்க்கும் ஒருவர் ஆகிய மூவரின் கதையும், செக்ஸ் போதைக்கு அடிமையான இருவருக்கும், அவர்களை நல்வழிப்படுத்த சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், உளவியலாளர்களும், மருத்துவர்களும் கூறும் அறிவுரைகள் அடங்கிய ஒரு குறும்படம்தான்
“Teens hooked on Porn”
“இக்குறும்படத்தின் சில காட்சிகள், செக்ஸ் குறித்து இடம்பெறுவதால், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் பார்த்தால், தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த இப்பதிவு உதவலாம்”

செக்ஸ் காணொளி/போர்னோகிராஃபியால் பாதிக்கப்பட்ட மூவரின் கதையாக வரும் இப்படத்தில், இன்றைய சூழலில் போர்னோகிராஃபி, இணைய உலகில் எந்த நிலையில் உள்ளது, அதன் விளைவுகள் என்ன, மீண்டு வர வழிகள் என்னென்ன, என பல கருத்துகளை அலசும் இப்படத்தின் அறிவுரைகளை மட்டும் சொல்லிவிட்டு முடித்துக்கொள்கிறேன்!
குறும்படம் முன்வைக்கும் கருத்துக்கள்!
- போர்னோகிராஃபியானது, தனக்கு பிடித்த ஒரு பெண்ணை இணையத்தில் தேடுவதற்காக எனத் தொடங்கப்பட்டு, செக்ஸ் போதை/அடிமைத்தனத்தில் முடிகிறது!
- பிரிட்டனைச் சேர்ந்த Darryl, (வயது 17) எனபவருக்கு போர்னோகிராஃபி ஒரு பிரச்சினையாக தெரியவில்லையாம்! (மக்கள் சிந்திக்க?!)
- 16 வயதான Malcolm, மற்றும் 14 வயதான Colin என்ற இருவரும் போர்னோகிராஃபியால், தங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகச் சொல்லி செக்ஸ் தெரபிஸ்ட் மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள்!
- பாதிக்கப்பட்ட இருவரின் பழக்க வழக்கங்களில், கோபம், ஆக்ரோஷம், குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்றவை போர்னோகிராஃபியால் ஏற்பட்ட புதிய மாற்றங்கள்!
- இப்பிரச்சினையில் பேற்றோர்களின் பங்கு என்ன, அதை எப்படிச் சமாளிப்பது என்று சொல்கிறது இக்குறும்படம்!
அறிவுரைகள்!

- போர்னோகிராஃபி காணொளிகள், செக்ஸ் கல்வி காணொளிகள் அல்ல. அவை எல்லாமே இணையத்தில் சுலபமாக விலைபோகும் செக்ஸ் செயல்பாடுகளை, தேர்ந்த நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை/நாடகம் அல்லது இயக்கப்பட்ட ஒரு நிகழ்வே தவிர, உண்மையான/யதார்த்தமான செக்ஸ் செயல்பாடுகள் அல்ல!!

- போர்னோகிராஃபியில் வரும் காணொளிகளும், நிஜ உலக செக்ஸ் வாழ்க்கையும் முற்றிலும் வேறானவை, இதில் சுகாதாரமின்மையும் இருப்பதை கவனித்தல் அவசியம்!

- நமக்குக் காண்பிக்கப்படாத/தெரியாத போர்னோகிராஃபி நிதர்சனங்கள் சில உண்டு. உதாரணமாக, போர்னோகிராஃபியால் ஏற்படும் குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் மற்றும் பல தற்கொலைகள்!!

- போர்னோகிராஃபியானது செக்ஸ் வாழ்க்கையை உருக்குலைத்துவிடும், செக்ஸ் குறித்த முற்றிலும் தவறானதொரு புரிதலை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க!!

- செக்ஸ் செயல்பாடுகளை மட்டுமே சொல்லும் போர்னோ, அதன்பின் ஏற்படும் பழக்கவழக்க மாற்றங்களையோ, அதிர்ச்சிகரமான பல பின் விளைவுகளைப் பற்றியோ ஒருபோதும் சொல்வதில்லை!!

- எல்லாவற்றிற்க்கும் மேலாக, நிஜ உலக உறவுகளை புறக்கணிக்கும் ஒரு மோசமான ஒரு நிலைக்குக் கூட ஒருவரை மாற்றக்கூடியது இந்தப் பாழாய்ப்போன போர்னோகிராஃபி!!

இவை இப்படத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளாக எனக்குத் தோன்றியவை. மீதமுள்ளவற்றை நீங்களே படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்!!
நன்றி.
No comments:
Post a Comment