பூக்களின் பயன்கள்–Flowers Health Benefits
- கருஞ்செம்பைப்பூ
- வேப்பம்பூ
- முருங்கைப்பூ
- மல்லிகைப்பூ
- குங்குமப்பூ
- கண்டங்கத்திரிப்பூ
- அல்லிப்பூ
- சூரியகாந்திப்பூ
- சம்பங்கி பூ
- தாமரை பூ
- தூதுளம் பூ
- மாதுளம் பூ
- செங்காந்தள்
- செவ்வகந்திப்பூ
- முள்முருக்கம்பூ
- வாழைப்பூ
- தென்னம்பூ
- பன்னீர் பூ
- மந்தார்ப்பூ
- புளியம்பூ
- வாகைப்பூ
- பனம்பூ
- நொச்சிப்பூ
கருஞ்செம்பைப்பூ - சிற்றகத்தி – Common Sesban
கபநோய்,மூக்கடைப்பு, தலைவலி,வாத நோய் போன்றவைகள் குணமாகும். கருஞ்செம்பை பூவுடன், நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி குளித்து வந்தால் தலைப்பாரம் தலைவலி குறையும்.
சிற்றகத்தி இலையை தேவையான அளவு எடுத்து அரைத்து கட்டிகள் மேல் பூசி வர பழுத்து உடையும்.
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது. அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும்.
வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப்பூ கைக்கண்ட மருந்து.
வேப்பம்பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்தது குளித்து வர பொடுகு குறையும்.
முருங்கைப்பூ – Drumstick Flower

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.
முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
முருங்கைப்பூவை எண்ணெயில் காய்ச்சி சிறு குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டி வந்தால் சளி பிடிக்காது.
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.அதிகப் பால்சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால்சுரப்பு குறையும்.
மல்லிகைப்பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.
நகசுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ, வெண்ணை கலவையை நகங்களின் மீது தடவிவர நகங்களை சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் இவைகளை சேர்த்து முப்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இரவு படுக்கப் போகுமுன் பசும்பாலில், தேன், மஞ்சள் பொடி, குங்குமப்பூ இவைகளை சேர்த்து சாப்பிட்டுவர உடல் மினுமினுப்பு பெறும்.
கண்டங்கத்திரிப்பூ - SOLANUM SURATTENSE Flower
மூல நோய்க்கு இந்தப் பூ கைகண்ட மருந்து.வாதுமை நெய்யில்கண்டங் கத்திரிப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி மூலம் உள்ள இடத்தில் தடவி வர, மூல நோய் குணமாகும்.
கண்டங்கத்திரி சமூலத்தை (இலை, பூ, காய், பழம், விதை, வேர்) பொடித்து வைத்து அதை கஷாயமாக்கி அருந்தி வந்தால் கழுத்து வலி தீரும்.
நீரிழிவு பாதிப்பு நீங்க வெள்ளை அல்லி மலரின் இதழ்களை காயவைத்துபொடித்து கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வர நீரிழிவு நோயின் பாதிப்பு நீங்கும்.
இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீர்க்கும். அல்லிப் பூவை அரைத்து சர்பத் செய்து சாப்பிடலாம்.
உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். செவ்வல்லியின் இதழ்களை காயவைத்து பொடி செய்து காலை மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
சூரிய காந்திப் பூவிலுள்ள விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.
காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.
சம்பங்கிப் பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி அதனை வடிகட்டி அதற்கு தேவையான அளவு சர்க்கரை போட்டு இரவில் படுப்பதற்கு முன்பு குடிக்க மலச்சிக்கல் குறையும்.
50 கிராம் சம்பங்கி விதை,50 கிராம் சம்பங்கி பூக்கள்,10 கிராம் துளசி,5 கிராம் கிராம்பு,10 கிராம் வேப்பிலை இவற்றை அரைத்து வெந்நீரில் குழைத்து பருக்கள் மீது தடவினால் முக பருக்கள் குறையும்.
ஈரலில் ஏற்படும் சூடு, ஒவ்வாத மருந்தின் துன்பம், உடலில் உண்டாகிற எரிச்சல் யாவும் தீரும்.
தாமரை பூ இதயத்திற்கு பலமளிக்கும். உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.
தூதுளம் பூ – தூதுவளை - Solanum Trilubatum
தூதுளம் பூ உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.
தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.
மாதுளம் பூ – Pomgranate Flower
- மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
- மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
- மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
- மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
- மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
செங்காந்தள் – Gloriosa Superba
வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குட்டம் ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், ஆற்றலூட்டும் குடிப்பானாகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.
சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து.
இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிக அளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் நிலைமையினை இது முறித்து விடுவதாகக் கூறப்படுகிறது.
இக்கிழங்கால் பாம்பின் நஞ்சு, தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும் எனப்படுகிறது.
செவ்வகந்திப்பூ, செவ்வந்தி , சாமந்தி - chrysanthemum indicum
உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.
காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாறை 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்
முள்முருக்கம்பூ - Erythrina variegata – Indian Tiger Claw
சூதக கட்டு [மாத விலக்கு தடை] நீங்கும்.
சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும்.விந்து விருத்தியாகும்.
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாறு எடுத்து குடித்திட சிறுநீரக கோளாறுகள் குறையும்.
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மா மரத்துப்பட்டை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை சாப்பிட்டால் மூலம் குறையும்.
வாழைப்பூ சாறுடன் சீரகம் சேர்த்து காலை, மாலை குடிக்க மூலம் குறையும்.
வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கைகால் எரிச்சல் குறையும்.
தென்னம்பூ- Coconut Tree Flower
பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும் குருக்கத்திப்பு. கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம், புண், பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்.
தென்னம்பூவை மென்று தின்று வந்தால் அடிப்பட்டதால் உண்டான உள்காயங்கள் குறையும்.
பன்னீர் பூ - மரமல்லி - Millingtonia hortensis – Indian Cork
வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்துவிரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.
மந்தார்ப்பூ- மந்தாரை – Bauhinia Purpurea
உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.
தைராய்டு சுரப்பு குறைபாடை தடுக்க மாத்திரையாக தயாரித்து கொடுக்கபடுகிறது.
உடல் எடை குறைப்பதற்கும் மருந்தாக கொடுக்கப்படுகிறது.
புளியம்பூ - மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.
சிறுகீரை வேர், பொன்னாங்காணி வேர், புளியம்பூ, திப்பிலி ஆகியவற்றை எலுமிச்சம்பழச் சாற்றில் மைபோல் அரைத்து மாத்திரை போல் உருட்டி காய வைத்து எலுமிச்சம்பழச் சாற்றில் உரைத்து கண் கட்டியின் மீது போட்டால் கண் கட்டி குறையும்.
வாகைப்பூ – உழிஞ்சில் - Sirissa - Mimosa Flexuosa
வாகைப்பூ கசப்பு சுவையுடைய இப்பூ, சூட்டை நீக்கும். மஞ்சள், சந்தனம், வாகை, புளியாரைச்செடி ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் அழுத்தி தடவி வர முகத்தில் உள்ள பரு குறையும்.
பனம்பூ – Palm Flower – Borassus Flabellifer
பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம், நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும். பனை நுங்கைத் தோல் உரிக்காமல் சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு குறையும். பனை நுங்கின் சாறெடுத்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி வர வியர்க்குரு குறையும்.
நொச்சிப்பூ – நீலி – Chaste Tree Flower
நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.
நன்றி.
No comments:
Post a Comment