காளான்
காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சை உயிரினம் ஆகும். காளான் என்பது சைவ பிரியர்களின் வரப்பிரசாதம். அனைவருக்குமே ஏற்ற வகையில் இயற்கை அளித்திருக்கும் உணவு எனலாம்.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடக்கின்றன. 6000 ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டறிந்து சீனா ஜப்பான் போன்ற நாடுகள் இதை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
[மேலே]
இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும்.
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் டீகாபி ஆகியவற்றில்- இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப்படுகிறது.
கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.
இந்தியாவில் மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது
[மேலே]
மேலும் காப்பர் 16%mg, செலினியம் 13%mcg, ஜின்க் 3%mg போன்ற தாதுக்களும், விட்டமின்களும் அடங்கியுள்ளது.
[மேலே]
இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசரைடு பாஸ்போலிபிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது.
[மேலே]
மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை கட்டுபடுத்த இது உதவுகிறது.
[மேலே]
ஸ்ட்ரெஸ் என்ற மனச்சோர்வையும் போக்கும் அறுமருந்தாகவும் இது செயல்படுகின்றது.
[மேலே]
மேலும் இதில் நீர் சத்து அதிகப்படியாக உள்ளதால் உடல் எடையைக் குறைப்பவர்களுக்கேற்ற உணவு.
[மேலே]
பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்று நோயை சுமார் 64 விழுக்காடு வரை தடுக்கும் வல்லமை இந்த காளானுக்கு உண்டாம். காளானுடன் பச்சைத் தேனீரும் (கிரீன் டீ ) அருந்துவோருக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு 90 விழுக்காடு குறைகிறதாம்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
[மேலே]
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
[மேலே]
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
[மேலே]
விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும், பூச்சிகளால் கவரப்படாததாகக் காணப்படும். நறுக்கிய வெங்காயத்துண்டுகளுடன் பிசையும் போது ஊதா நிறம் தோன்றும்
[மேலே]
நன்றி.
No comments:
Post a Comment