கண்டங்கத்திரி - SOLANUM SURATTENSE.
தாவரக்குடும்பம் - SOLANACEAE.
சமஸ்கிருதம் : Vyighri, Nidigdhiki, Kshudri, Kantakiriki, Dhivani, Nidigdhi, Dusparsi
ஹிந்தி : Katai, Katali, Ringani, Bhatakataiya, Chhotikateri
கண்டங்கத்திரி, கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு செடி. இந்த தாவரம் முழுவதும் முட்கள் காணப்படும். நீல நிறத்தில் மலர்கள் கொத்து கொத்தாகக் காணப்படும். சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் கொண்டதாக காணப்படும்.
இது சளிப்பிடித்தல் போன்ற உடல் நலக்குறைவுகளைத் தீர்க்கப் பயன்படுத்தும் மூலிகை (மருந்துச்செடி). சோலானம் (Solanum) என்னும் பேரினத்தைச் சேர்ந்த செடி. இதற்குப் பல அறிவியற்பெயர்கள் உள்ளன. சோலானம் காந்த்தோக்கார்ப்பம் (Solanum xanthocarpum) என்றும், சோலானம் சுரெட்டென்சு (Solanum Surettense Burm) என்றும் அறிவியலில் அழைக்கப்படுகின்றது.
இந்த செடியின் இலைகள், தண்டு, மலர், கனி, விதை ஆகிய முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டவை. அர்வாதி என்னும் ஆயுர்வேத மருந்தின் பகுதியாக உள்ளது.
இது கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயற்படும்.
பல்வேறு பாக்டிரியா(Bacteria) எதிரான இதன் மருத்துவ பண்பு.
மருத்துவப் பயன்கள்
கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்லதொரு மருந்து. கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.
சளிக்காய்ச்சல்
வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காய்ச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.
நிமோனியா
சமூலம் 1 பிடி, ஆடாதொடை 1 பிடி, விஷ்ணுகாந்தி பற்படாகம் இரண்டும் 1 பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக்கி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் சாப்பிட புளு சுரம், நிமோனியா சுரம், மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.
ஆஸ்துமா
(கண்டங்கத்திரி குடி நீர்) கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம், அரிசிதிப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் (ஆஸ்துமா), என்புருக்கி(க்ஷயம்), ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்.
பழத்தை உலர்த்தி நெருபிலிட்டு வாயில் புகைப் படிக்க பல் வலி, பல் அரணை தீரும்.
ஆண்களுக்கு
பழம் ஆண்களுக்கு ஒரு பாலுணர்வூக்கி போல் செயல்படுகிறது.
பெண்களுக்கு
இதன் விதைகள் பெண்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதிக இரத்த போக்கு சிகிச்சைக்கும் பயனுள்ளதாக உள்ளன.
கண்டகத்ரி வயிற்று புழுக்கள் அகற்றும் சிகிச்சையில் பயனுள்ளதாக உள்ளது
மூட்டு வீக்கம்
இந்த மூலிகையின் இலைகளை அரைத்து மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் குறையும்.
குறிப்பு
கண்டகத்ரியை பெண்கள் பிரசவமாக இருக்கும் பொழுது எடுத்து கொள்ள கூடாது.
நன்றி.
No comments:
Post a Comment