இறால்
இறால்கள் முதுகெலும்பில்லாத பிராணி. இதற்கு மெல்லிய வழுவழுப்பான, மற்றும் கிட்டத்தட்ட வெளிப்படையான உடல் இருக்கிறது. இறாலின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது.
இறாலின் சில வகைகள் மங்கிய ஒளியை உண்டாக்கி ஒளிர முடியும்.
இறாலில் சுமார் 300 இனங்கள் உள்ளன. அவைகள் பல்வேறு அளவு மற்றும் வண்ணங்கள் - சாம்பல், பழுப்பு, மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை என பலவாறாக உள்ளது.
இறால்கள் சுமார் 9 அங்குலம் வரை வளரும் ஆனால் பெரும்பான்மையானவை மிகவும் சிறியவை, மற்றும் சில சுமார் 6.5 ஆண்டுகள் வரை வாழ முடியும்
தமிழ் நாட்டில் இறாலை பெரும்பாலும் வறுத்தும், தொக்கு போல் செய்தும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இறால் குழம்பு மற்றும் இறால் பிரியாணியும் விரும்பி உண்ணப்படுகிறது.
மற்ற கடல் உணவுப் பொருட்களைப்போல் இறாலில் அதிகமாக கல்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சரியாக சொல்வதென்றால் செலினியம்(Selenium), புரதம்(Protein) நிறைந்த மற்றும் வைட்டமின் பி12, D, இரும்பு(Iron), மெக்னீசியம்(Magnesium), பாஸ்பரஸ்(Phosphorus), துத்தநாகம்(Zinc), தாமிரம்(Copper) மற்றும் ஒமேகா-3-கொழுப்பு அமிலங்கள்(Omega-3 -fatty acids) நிறைந்த நல்ல சத்தான உணவாகும்.
உடலில் செலினியம் குறைபாடு புற்றுநோய் உட்பட பல வகை நோய்கள் ஏற்படுத்தும். இறாலில் செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கும்.
இறாலில் வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த உள்ளன, இச்சத்து அதிக சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு ஆதரவு மற்றும் இரத்தசோகை தடுக்க உதவுகிறது .
இறாலில் பாஸ்பரஸ் நிறைய இருக்கின்றன. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சேர்ந்துதான் வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. இது இரண்டு தலைமை சத்துக்கள் இறாலில் நிறைய உள்ளன.
இறாலின் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆய்வுகள் படி சக்திவாய்ந்த, மனக்குழப்பத்திற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் ஏற்கனவே கோளாறால் பாதிக்கப்பட்ட அந்த மனநிலை மேம்படுத்த உதவும் என்று காட்டியுள்ளன
இறாலில் உள்ள செப்பு(copper) சத்து மூலம் தைராய்டு ஆரோக்யமமாக செயல்பட உதவுகிறது.
இறாலில் உள்ள மக்னிசீயம்(Magnesium) சத்து நீரழிவு(இரண்டாவது) நோய் வருவதை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இறாலில் உள்ள நியாசின்(Niacin) சத்து உடலில் உள்ள மாவுச்சத்து(Carbohydrates), புரதச்சத்து(Protein) மற்றும் கொழுப்புச்ச்சத்துகள் உடம்புக்கு தேவையான சக்தியாக மாற்றுகிறது.
இறால் உண்போம், இறப்பை தள்ளி வைப்போம்.
நன்றி.
No comments:
Post a Comment