கோழிக்கறி - சிக்கன் – Chicken
கோழிக்கறியில் உடம்புக்கு தேவையான நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைய உள்ளன. கோழிக்கறியில் உள்ள சத்துக்கள் நமது உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்ற அசைவ கறிகளை விட கோழிக்கறி மிக பாதுகாப்பானது.
சிக்கனில் புரதம் மற்றும் நியாஸின் ஆதாரம் உள்ளது. இது செலினியம், வைட்டமின் B6 மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த ஒரு நல்ல ஆதாரமாகவும்.
. சிக்கனின் பாஸ்பரஸ், ஒரு மிக மிக முக்கிய தாதாகும். இது எலும்பு மற்றும் பல் சுகாதாரமாக பராமரிக்க உதவுகிறது, மேலும் இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மிக சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது.
. சிக்கனின் செலேனியும்(Selenium) சத்து உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
. வயதானவர்களுக்கு சிக்கனில் உள்ள புரத சத்து எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட புரத உணவு உட்கொள்ளும் அளவு பாதிக்கும் மேல், 100 கிராம் கோழி மார்பக கறியில் உள்ளது.
. சிக்கனில் உள்ள நியாசின்(Niacin) சத்து புற்று நோய்க்கு எதிராக வேலை செய்கிறது.
. சிக்கன் தோளில் அதிக கொழுப்பு உள்ளது, அதனால் முடிந்த வரை அதனை தவிர்ப்பது நல்லது. அதிகமாக உண்டால் சிக்கனில் உள்ள யூரிக் அமிலம்(Uric acid) சிறுநீரகத்தில் கற்களை உண்டாக்கலாம்.
. கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது.
சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.
சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர்.
இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.
நன்றி.
No comments:
Post a Comment