Monday, February 28, 2011

ஜெயித்தால் பாராட்டுங்கள்; தோற்றால் தட்டிக்கொடுங்கள்


விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.


சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.

ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க!

பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.

பெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ்:

* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம்.

* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்!

கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்


இன்றைய அவசர யுகத்தில் கிடைத்ததை உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக்கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.


மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர்தான், சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது.

அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல் இதோ:

ஓட்ஸ்:

உடல் மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம்பெறுவது இது.நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.

ஓட்ஸில் 'பீட்டா-குளூகான்'என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பதுதான் இதிலுள்ள தனி சிறப்பு.

இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ்தான்.

உடலில் மிக அதிக கொழுப்புடையவர்கள் கூட (220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை - அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு - உட்கொண்டால் கூட அதிகப்படியான கொழுப்பு முற்றிலும் குறைந்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு ஓட்ஸ் நமது உடலில் மேஜிக் நடத்திவிடுகிறது.

சோயாபீன்ஸ்:

ஓட்ஸை போன்றே சோயா பீன்ஸும் பல்வேறு இருதயநோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைத்து,நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

பச்சை தேயிலை:

'கிரீன் டீ" எனப்படும் பச்சை தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் கிடைக்கும் பலன்களை சொல்லிமாளாது. பச்சை தேயிலை தேநீர் மகா உசிதம்தான் என்றாலும், சாதா தேயிலை கொண்டு தயாரிக்கப்படும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயிலும் பச்சை தேயிலையின் நற்குணங்கள் ஓரளவு அடங்கியுள்ளது. கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உறைதல் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவது போன்ற அற்புதங்களை இந்த பச்சை தேயிலை நிகழ்த்தி காட்டுகிறது.

மேலும் தேநீரில் 'ஃபோலிக் அசிட்' எனப்படும் உயிர்சத்தான ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. இது இருதய நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தை குறைக்கிறது.நாளொன்றுக்கு ஒருவருக்கு தேவையான ஃபோலிக் அமில சத்தில் 25 விழுக்காடு, ஒருவர் தினமும் ஐந்து கப் தேநீர் அருந்தினால் கிடைக்குமாம்.

பார்லி( ஜவ்வரிசி):

பார்லி அல்லது ஜவ்வரிசி என்றழைப்படும் இதில் உடல் ஆரோக்கியத்தை பேணும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.குறிப்பாக இருதயத்திற்கு இது மிகவும் நல்லது.கொழுப்பை எதிர்த்து போராடுவதில் ஓட்ஸை விட பார்லி அதிக திறன் வாய்ந்ததாம்.ஓட்ஸைப் போன்றே பார்லியிலும் 'பீட்டா குளூகோன்' என்ற நார்சத்து அடங்கியுள்ளது.மேலும் கல்லீரலுக்கு தேவையான வைட்டமின் 'டி'யும் இதில் உள்ளது.

முதுமையில் கூன் விழுவது ஏன்?


நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். முதுமை வந்து விட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பழுதுபட்டால் வருவதாகும்.


முதுகெலும்பு பழுதுபாடு

முதலில் கழுத்துப் பகுதியில் உள்ள முது கெலும்புகள் (வம்சிகள்) பழுதுபடக் காரணம் தலையில் அதிக பளு தூக்குவது. மேலும் கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற காரணங்களால் கழுத்து வம்சிகள் குறிப்பாக 6ஆவது மற்றும் 7ஆவது வம்சிகள் பாதிக்கப்பட்டு, சில சமயம் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் விளைவாக கழுத்து முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இயல்பான நிலையிலிருந்து மாறி கூன் விழுந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறது. இதேபோல் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்புப் பகுதியில் உள்ள வம்சிகளில் வரும் பழுது மற்றும் தேய் மானம் வழக்கமானது.

குறிப்பாக 4, 5வது இடுப்பு வம்சிகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் சாதாரணமான ஒன்று.

பழுதுபாடுகளுக்கான பொதுவான காரணங்கள்

* அதிகப்படியான பளு தூக்குதல்

* இயந்திரங்களில் அதிக நேரம் பணியாற்றுதல்

*அதிகமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை உபயோகித்தல்.

*பொருத்தமில்லாத இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல் *புகைப்பழக்கம் *மது, போதைப் பழக்கம் * மன உளைச்சலுடன் நீண்ட நேரம் பணியாற்றுதல்.

*மிகுந்த கோபம், தாழ்வு மனப்பான்மை * விபத்தால் முதுகுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருத்தல்.

வம்சிகளின் இடைத்தட்டு பிறழ்ச்சி பொதுவாக இடுப்பு வம்சிகளில் ஒரு வம்சிக்கும் மற்றொரு வம்சிக்கும் இடையில் இருக்கும். வம்சி இடைத்தட்டானது அடிபடும் போதும், அல்லது மேற்சொன்ன பல கார ணங்களினாலும், தான் இருக்கும் இயல்பான இடத்திலிருந்து விலகி விடுகிறது. இதனால் மேலும் கீழும் இருக்கும் வம்சிகள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று உராய்வதால், அது நாளடைவில் எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு முதுகெலும்பு அமைப்பு இயல்பான நிலையிலிருந்து விலகி சற்று முன்னோக்கி சாய்ந்து கூன் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

எலும்புகளின் துணை வளர்ச்சி

சில நேரம் இந்த வம்சிகளுக்கு அருகில் ஒரு சிறு எலும்புத்துண்டு வளர்ந்து அது நாள டைவில் வம்சித் துளை சூழ்ந்து வளர்ச்சி அடைவதால் அப்பகுதியில் உள்ள நரம்புகள் அழுத்தப்பட்டு, மிகுந்த வலியை உண்டாக்குகிறது.

காச நோயினால் கூன் விழுதல்

50 வீதமானவை காச நோயின் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு அவை பழுதாகி அதன் இயல்பான நிலை மாறி கூன் விழு வதற்கு காரணமாகிறது. சத்துப் பற்றாக்குறை வயதான காலங்களில் விட்டமின் டி மற்றும் கல்சியம் சத்து போதிய அளவு கிடைக்காமல் போவதால் எலும்புகள் வன்மை குன்றி, மெலி வுற்று அதனாலும் கூன் விழுவதற்கு காரணமாகிறது.

கூன் விழுவதை தடுக்கும் வழிகள்

கவிழ்ந்த நிலையில் செய்யும் வேலை களைத் தவிர்க்கலாம். சற்று மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்கலாம்.வயது முதிர்ந்த காலத்தில் வாதத்தை மிகுதிப்படுத்தும் உருளைக்கிழங்கு, வாழைக் காய் போன்றவற்றையும், வாதம்உண்டாக்கும் பருப்பு வகைகளையும் தவிர்க்கலாம். அடிக்கடி வெந்நீர் ஒற்றடமிடுதல் நல்லது.

வீடு பார்க்கப் போறீங்களா


வீடு பார்க்கப் போகும் போது பகல் நேரத்திலேயே செல்லுங்கள். பஸ் ஸ்டாப்பிலிருந்து அந்த வீட்டுக்கு நடந்து சென்று பாருங்கள். ஏனென்றால் நடந்து வந்தால் தான் எவ்வளவு நேரம் (தூரம்) ஆகிறது என்று தெரியும். நீங்கள் கார், வண்டி வைத்திருக்கலாம். ஆனால் உங்கள் வீட்டில் மனைவியோ, குழந்தைகளோ அடிக்கடி வெளியே செல்ல பஸ்தான் தேவைப்படும்!


முடிந்த வரை உங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளி அருகிலேயே வீடு இருக்கும்படி பாருங்கள்.

வீட்டைச் சுற்றி இடமிருந்தால் அதன் வழியே நடந்து சுற்றிப் பாருங்கள். அப்போதுதான் எங்கிருந்தெல்லாம் உங்கள் வீட்டைப் பிறர் கவனிக்க முடியும் என்பது புரியும்.

நீங்கள் குடிபோகும் வீட்டில் ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி பண்ணாமல் இருந்தால் நீங்கள் சென்று வீடு பார்க்காதீர்கள். யாருமே இல்லாமல் வெறும் வீட்டை மட்டும் பார்க்கும்-போதுதான் வீடு எவ்வளவு பெரியது, நாம் வைத்துள்ள பொருட்களுக்கு அந்த வீடு போதுமா? என்பது தெரிய வரும்.

தண்ணீ­ர் வசதி, மின் வசதிக்கு தனி மீட்டர் தானா என்று நீங்களே சோதித்துப் பார்த்து விடுங்கள்.

தண்­ணீர் பைப் லீக் ஆவது, பாத்ரூமில் தண்ணீ­ர் அடைத்துக் கொண்டு போகாமல் இருப்பது, சில கதவுகள், ஜன்னல்கள் லாக் பண்ண முடியாமல் இருப்பது என்று எதுவாக இருந்தாலும் உங்க வீட்டு உரிமையாளரிடம் சொல்லி செய்யச் சொல்லுங்கள். அந்த வசதியை அவர் செய்து கொடுத்த பிறகே குடி வாருங்கள். குடி வந்த பிறகு அவர் செய்து தரமாட்டார்.

சில இடங்களில் கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடி வீட்டில் உரிமையாளர் இருப்பார். அவர் நாய் வளர்த்தால் எங்கு கட்டி வைப்பார்கள் என்று பாருங்கள். கேட் அருகே அல்லது உங்கள் வீட்டருகே கட்டி வைத்தால் அது குரைத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும். மேலும் அந்த இடத்தையும் நீங்கள் தான் சுத்தம் பண்ண வேண்டி வரும்.

குடிபோகும்போதே, வீட்டில் எத்தனை டியூப் லைட், ஃபேன் மற்றும் கண்ணாடி, ஜன்னல் உடைந்திருக்கிறது என ஒரு நோட்டில் குறிப்பிட்டு உங்கள் கையெழுத்து மற்றும் வீட்டு உரிமையாளர் கையெழுத்தையும் வாங்கி பத்திரப்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் காலி பண்ணும்போது ஏற்கனவே உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கும் நீங்கள்தான் தண்டம் அழவேண்டி வரும்.

நீங்கள் குடிபோகும் வீட்டின் காம்பவுண்டில் எத்தனை வீடுகள் உள்ளது என்று கவனியுங்கள். அவர்களுக்கு பாதை எது என்பதையும் கவனியுங்கள். ஏனென்றால் அவர்கள் செல்லும் பாதை உங்களுக்கோ, நீங்கள் புழங்கும் இடத்திற்கோ இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

நீங்கள் எத்தனை இரு சக்கர வாகனம் வைத்துள்ளீர்கள்... உங்கள் வண்டியை நிறுத்த இடம் உள்ளதா எனபதைக் கவனியுங்கள்.

வீட்டு வாடகையை எத்தனை வருடத்துக்கு ஒருமுறை உயர்த்துவார்கள் என்பதைத் தெளிவாக பேசிக்கொள்ளுங்கள் ஏனென்றால், சில இடங்களில் உரிமையாளர் திடீரென்று 'அடுத்த மாத வாடகையுடன் ரூ.200 சேர்த்துக் கொடுங்கள்' என்று சொல்லி விடுவார்கள்.

Saturday, February 26, 2011

ரத்த அழுத்தமா கூலா தண்ணிர் குடிங்க


நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,

‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.

மாதுளத்தின் மருத்துவக்குணம்


மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.


பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து உள்ளது. புரதச்சத்து , நார்ச்சத்து விழுக்காடும், கார்போ ஹைட்ரேட், தாதுக்கள் சுண்ணாம்புச் சத்து மக்னீஷியம் அடங்கியுள்ளன.

மேலும், விற்றமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.

மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.

மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.

கணினியில் வேலை செய்கிறீர்களா


பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.


* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

ஆட்கொல்லி நோயாக உருவெடுக்கும் நுரையீரல் நோய்கள்


2020ஆம் ஆண்டுவாக்கில் நுரையீரல் தொடர்பான நோய்கள் உயிர்பறிக்கும் நோய்களாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


அதாவது மும்பை நகரில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களில் பாதிப்பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 10 கோடி மக்கள் நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகரங்களில் வாகனப்புகையை சுவாசிக்கும் பெருமபகுதி மக்களுக்கு பல்வேறு விதமான மூச்சுக்குழல் நோய்கள் உருவாகி வருவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்துத் துறை காவலர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீடல் நோய் இருப்பது தற்போது மும்பையில் தெரியவந்துள்ளது.

மும்பை செவென் ஹில்ஸ் மருத்துவமனையில் சுமார் 115 போக்குவரத்துக் காவலர்களுக்கு இலவச நுரையீரல் சோதனை நடத்தப்பட்டதில் 45% காவலர்களுக்கு நுரையீரல் பலவீனமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

20 சதவீதத்கினருக்கு ஆரம்ப நிலை நுரையீரல் பாதிப்புகள் உள்ளன. மும்பையின் அதிக வாகனப்புகை கக்கும் ஒரு பகுதியில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வரும் சுரேஷ் பாட்டீல் என்ற காவலர் வாகனப்புகையினால் தனது முடி கொட்டிப்போனதையும், சரும நோய்கள் ஏற்பட்டிருப்பதையும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு போக்குவரத்துக் காவலரான சுஹாஸ் பாட்டீல் தனது நிறம் கரிய நிறமானதோடு இரவில் மூச்சு விடுவதில் கடும் சிரமங்கள் தோன்றியிருப்பதாகவும் கூறுகிறார்.

நுரையீரல் பாதிப்பு பற்றிய அறிகுறிகள் தாமதமாகவே தெரியவருகிறது. உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் சிகிச்சை சாத்தியம் என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காவலர்கள் மட்டுமல்ல பெருநகரங்களில் நாள் முழுதும் சாலையில் சுற்றும் நபர்களும், சாலையோரங்களில் கடை கண்ணிகள் நடத்துவோரும் இன்னும் பலரும் தங்களது நுரையீரலின் நிலைமை குறித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளனர்.

Thursday, February 24, 2011

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள்


குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உணவில் பொதுவாக புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் என்னும் ஐந்து வகையான முக்கிய உணவுச் சத்துகள் அடங்கியுள்ளன.


குழந்தையின் உணவில் இந்த ஐந்து வகையான முக்கிய ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பல வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர்.

உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதம் பால், முட்டை, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி போன்ற உணவுப் பொருட்களில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் பால், பருப்பு, பட்டாணி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான கொழுப்பு பால், வெண்ணெய், நெய், இறைச்சி, சமையல் எண்ணெய்கள் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் உணவில் நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய்கள் போன்றவற்றை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

மாவுப் பொருட்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. அரிசி, கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றில் மாவுப் பொருட்கள் அதிகமாக உள்ளன. அரிசிச் சோறு, கோதுமை மற்றும் வேறு தானியங்களில் செய்த பண்டங்கள், உருளைக் கிழங்கு போன்றவற்றை குழந்தையின் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக, சிறு குழந்தைகளின் உணவில் மாவுப் பொருள், கொழுப்பு ஆகியவற்றை விட புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே சமயம், மாவுப் பொருட்கள், கொழுப்பு ஆகியனவும் குழந்தைகளுக்கு போதுமான அளவில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதைத் தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு போன்ற சில தாதுப் பொருட்களும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. கால்சியமும், பாஸ்பரஸூம் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இரும்பு, செம்பு போன்றவை இரத்த விருத்திக்கு தேவைப்படுகின்றன.

பால், அவரைக்காய் போன்றவற்றில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. உப்பு, பால், கோழி, இறைச்சி போன்றவற்றில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. கீரை, அவரைக்காய், பட்டாணி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

சிறு குழந்தைகளின் தினசரி உணவில் மீன் எண்ணெய், பழரசம், பருப்பு, நெய், கீரை, காய்கறிகள், அரிசியுடன் கோதுமை, கேழ்வரகு போன்றவற்றையும் போதிய அளவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றையும் தினமும் கொடுக்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள உணவுச் சத்துக்கள் தவிர வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச் சத்துகளும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமாக தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் பொதுவாக ஏ, பி, சி, டி, இ, கே என்னும் ஆங்கில எழுத்துகளுடன் அழைக்கப்படுகின்றன.

தோல், தொண்டை, மூச்சுக்குழல், கண் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வைட்டமின் ஏ உதவுகின்றது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் சளித் தொல்லைகள் ஏற்படும். மாலைக்கண் நோய் ஏற்படும். இந்த நிலை முற்றினால் முழுமையான பார்வை இழப்பும் ஏற்படலாம்.

கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின் பால், தயிர், வெண்ணெய், மீன் எண்ணெய், கீரை, பழங்கள், காரட் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் இவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு, 10 வயது வரையிலும் குழந்தைக்கு தினமும் ஒரு வேளை இரண்டு தேக்கரண்டி மீன் எண்ணெய் கொடுப்பது நல்லது.

வைட்டமின் பி என்பது 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு. பி வைட்டமின்களில் ஒன்றான தையமின் பற்றாக் குறையினால் "பெரி பெரி" என்னும் நோய் ஏற்படும். கால்களில் குடைச்சல், சோர்வு, இதய பலவீனம் போன்றவை அந்த நோயின் அறிகுறிகளாகும். பழங்கள், ஈஸ்ட், முளைகட்டிய கொண்டைக்கடலை, பயறு, உளுந்து, அரிசித் தவிடு, பச்சைக் காய்கறிகள், முட்டை, கல்லீரல் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

மற்றொரு பி வைட்டமினான நிக்கோடினிக் அமிலம் பற்றாக்குறையினால் பெல்லாகிரா என்னும் நோய் ஏற்படும். பால், முட்டை, ஆட்டுக் கல்லீரல் ஆகியவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது. பல், ஈறு, இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் "சி" தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் "ஸ்கர்வி" என்னும் நோய் ஏற்படுகின்றது. ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, காலி பிளவர், பட்டாணி, நெல்லிக்காய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் "டி" தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. பால், வெண்ணெய், முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு நோய்களைத் தடுக்க வைட்டமின் "கே" தேவைப்படுகிறது. மீன் எண்ணெயில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு:

தாயார் கர்ப்பமாக இருக்கும் போது கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கவும், கருப்பையில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கவும் வைட்டமின் இ தேவைப்படுகிறது. பால், முளை கட்டிய பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இந்த வைட்டமின் உள்ளது.

ஸ்கர்வி:

வைட்டமின் சி பற்றாக்குறையினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகின்றது. பிறந்த எட்டு மாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த நோய் அதிகமாக பாதிக்கின்றது.

அறிகுறிகள்:

ஆரம்பத்தில் குழந்தைக்கு பசி இருக்காது. குழந்தையை எடுக்கும் போதும், கீழே விடும் போதும் குழந்தையின் கை, கால்களில் உள்ள எலும்புகளில் தாயின் கைபட்டு அதிர்ச்சி ஏற்படுவதால், குழந்தை வலி தாங்காமல் வீரிட்டு அழும். பல்முளைத்த குழந்தையானால் பற்களைச் சுற்றியுள்ள ஈறு வீங்கி நீலநிறத்துடன் காணப்படும்.

சிகிச்சை:

இதை வருமுன் தடுப்பது தான் சிறந்தது. குழந்தைக்கு தினமும் ஒரு தக்காளிப் பழம் அல்லது ஆரஞ்சுப் பழம் கொடுத்தால் இந்த நோய் ஏற்படாது. நோய் வந்த பின்னர் தினமும் மூன்று வேளைகளும் வைட்டமின் சி மாத்திரைகள் வேளைக்கு 50 மி.கிராம் அளவு கொடுத்து வந்தால் விரைவில் நோய் குணமாகிவிடும். அத்துடன் தினமும் இரண்டு வேளை பழரசம் கொடுக்கலாம்.

குழந்தையை அடிக்கடி கையில் எடுக்கக் கூடாது. மிருதுவான பஞ்சு மெத்தையில் படுக்க வைக்க வேண்டும். இந்த நோய்க்கு சொந்தமாக சிகிச்சை அளிப்பதை விட மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளிப்பது தான் சிறந்தது.

ரிக்கெட்ஸ்:

வைட்டமின் "டி" பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. உணவில் இந்த வைட்டமின் பற்றாக்குறையானாலும், சூரிய வெளிச்சம் படாமல் வளர்த்ததாலும் குழந்தைக்கு இந்த நோய் ஏற்படுகின்றது.

அறிகுறிகள்:

பெரும்பாலும் ஆறுமாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத்தான் இந்த நோய் அதிகமாக ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் குழந்தை எப்போதும் சிணுங்கிக் கொண்டே இருக்கும். குழந்தையின் தலை அடிக்கடி வியர்வையினால் நன்கு நனைந்து விடும். தாயார் தன் மீது போர்வையை போர்த்தினால் அதை விலக்கித் தள்ளி அழும். மார்பு எலும்புகளின் ஓரம் உத்திராட்ச மாலை போல பருத்து விகாரமாகிவிடும். பல் முளைக்கும் பருவம் தாண்டி பல மாதங்களான பின்னர் கூட பல் முளைக்கும் அறிகுறி கொஞ்சம்கூட இல்லாமல் வாய் பொக்கையாக இருக்கும்.

உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் பலவீனமாகி விடும். இதனால் நடக்கும் பருவத்துக் குழந்தைகளின் கால் எலும்புகள் வளைந்து போகும். முட்டிகள் தட்டும். இடுப்பு எலும்புகள் இயல்பான அகன்ற தோற்றத்தை இழந்து குறுகி விடும்.

பெண் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டு இடுப்பு எலும்புகள் இதபோல குறுகிவிட்டால், பின்னர் அவர்கள் வளர்ந்து கர்ப்பமாகும்போது பிரசவம் மிகவும் கஷ்டமானதாகி விடும். ரிக்கெட்ஸ் நோயினால் மற்ற எலும்புகளும் உறுதி குன்றும். சாதாரணமாக, ஆரோக்கியமான குழந்தையின் தலையில் உள்ள உச்சிக்குழி என்னும் பள்ளம் குழந்தை பிறந்த 18வது மாதத்திற்குள் நன்றாக மூடிக் கொண்டு விடும். ஆனால், ரிக்கெட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு வயதான பின்னரும் உச்சிக் குழி மறையாது.

ரிக்கெட்ஸ் நோய் குடலை அதிகமாக பலவீனப்படுத்தி விடுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜீரணக் குறைபாடுகள் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை பருத்து வயிறு பானை போல முன்னால் தள்ளிக் கொண்டிருக்கும். மூச்சு விட சிரமப்படும். சளி, இருமல் ஆகியவை அடிக்கடி ஏற்படும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுவதால் இந்தக் குழந்தைக்கு வலிப்பு நோய் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது.

சிகிச்சை:

வருமுன் தடுப்பதுதான் இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சை. தாய்ப்பால் கொடுத்துதான் குழந்தையை வளர்க்க வேண்டும். புட்டிப் பால் கொடுத்தால் குழந்தைக்கு கூடுதலாக வைட்டமின் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் குழந்தைக்கு மீன் எண்ணெய் கொடுக்க வேண்டும். நல்ல சூரிய வெளிச்சத்தில் குழந்தையை தினமும் விளையாட விட வேண்டும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால், குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

சருமம் பளபளக்க வேண்டுமா?


பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள்.முகம் பளபளக்கும் பப்பாளி பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும் முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.


ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாக்கி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும் கண்கள் பளீச்சாகும்வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிரகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெறும் தர்பூசினி பழச்சாறு, பயற்றமாவு கலந்து முகத்தில் பூசினால் முகம் புதுப்பொலிவு கிடைக்கும். தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும்

இப்படி தினமும் ஒரு 10 நிமிடம் நம் அழகுக்காக செலவு செய்தால் வயதானாலும் இளமையாக இருக்கலாம்

பட்டுப் புடவை - நகை பராமரிப்பு


அதிக விலை கொடுத்து வாங்கப்படும் பொருட்களுக்கு கொஞ்சம் கவனமும் அதிகம் தேவைப்படுகிறது. பட்டுச் சேலைகளை வாங்குவதில் காட்டும் அக்கறையை காட்டிலும் அதை பராமரிப்பதில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது!


அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்­ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்துத் துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.

விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன் பட்டுச் சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் கூடாது.

நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.

எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.

ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் தடவி 5, 10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும்.

பட்டுப்புடவைகளை வருடக் கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.

அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.

பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டைப் பையில் வைக்காமல் துணிப் பையில் வைக்கலாம்.

குழ‌ந்தைகளு‌க்கு‌ ‌பிடி‌த்தமான உணவு


ஒ‌வ்வொரு குழ‌ந்தையு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ரு‌சியை ‌விரு‌ம்பு‌ம். ‌சில குழ‌ந்தைக‌ள் காரமான உணவுகளை ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடு‌ம், ‌சில குழ‌ந்தைக‌ள் இ‌னி‌ப்பு, ‌சில குழ‌ந்தைக‌ளி‌‌ன் ‌விரு‌ப்ப‌ம் பு‌ளி‌‌ப்பாக இரு‌க்கலா‌ம்.


எதுவாக இரு‌ந்தாலு‌ம், அவ‌ர்களு‌க்கு செ‌ய்யு‌ம் உணவுகளை அவ‌ர்களது ‌விரு‌ப்பமான ரு‌சி‌க்கே‌ற்ப செ‌ய்வது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

ச‌த்தான உணவை, அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் வகை‌யி‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம். இ‌னி‌ப்பை ‌விரு‌ம்பு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு, அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் உண‌வி‌ல் ச‌ர்‌க்கரை‌க் கல‌க்காம‌ல், வெ‌ல்ல‌ம் கல‌ந்து அ‌ளி‌ப்பது ந‌ல்லது.

பொதுவாக குழ‌ந்தைகளு‌க்கு அனை‌‌த்து ‌விதமான உணவுகளையு‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அவ‌ர்க‌ள் பலதர‌ப்ப‌ட்ட சுவைகளை அ‌றிவா‌ர்க‌ள்.

முத‌லி‌‌ல் கா‌ய்க‌றிகளை ம‌ட்டுமே ஊ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல், ‌பிறகு, ‌மீ‌ன், மா‌மிச‌ம் போ‌ன்றவ‌ற்றை உ‌ண்ண மறு‌ப்பா‌ர்க‌ள். எனவே உண‌வினை பழ‌க்‌க‌ப்படு‌த்து‌ம் போதே அனை‌த்து ‌விதமான உணவுகளையு‌ம் உ‌ண்ண வை‌க்க வே‌ண்டு‌ம்.

அழகுக்கு அழகு செய்யும் ஒப்பனை


கோல்ட் கிரீம்: 
சருமத்தில் உள்ள அழுக்கை அகற்றி சுத்தப்படுத்துகிறது. கோடை,குளிர் என ஆண்டு முழுவதும் உபயோகப்படுத்தலாம். இது 'ஆல் பர்ப்பஸ்' கிரீம் ஆகும். எந்த வகை சீதோஷணத்திற்கும் உகந்தது.


வானிஷிங் கிரீம்: 
சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைத்து ,சருமத்திற்கு பளபளப்பு ஊட்டுகிறது.நரிஷிங் கிரீம்: சருமத்திற்கு போஷாக்கு அளிக்கிறது.

அஸ்ட்ரிஞ்ஜென்ட் லோஷன்:
சருமத் துவாரங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகிறது.

க்லென்சிங் கிரீம்:
முகத்தில் உள்ள அழுக்கை அகற்றவும், 'மேக் அப்' கலைக்கவும் பயன்படுகிறது.

கொலமின் லோசன்:
சருமத்தில் உள்ள புள்ளிகளை அகற்றி, சருமத்தை மாசு, மருவில்லாமல் வைக்கிறது.

பௌன்டேஷன் கிரீம்:
இது 'மேக் அப்' நல்ல விதமாக அமைய உதவி புரிகிறது. மேலும் புள்ளிகளையும், திட்டுகளையும் நீக்குவதையும் செய்து, சருமத்தையும் மிருதுவாக வைத்துக் கொள்கிறது. கன்னங்களை பளபளப்பு ஆக்குகிறது.

ரூஜ்: 
உதடுகளையும், கன்னங்களையும் சிவப்பேற்ற உதவும் சாதனம். இது திரவ வடிவிலும், கேக்காகவும், கிரீம் மாகவும் கிடைக்கிறது. கண்களோ, அது கருவண்டோ என அதிசயிக்க வைக்க உதவும் சாதனங்கள்.

ஐ ஷடோ: 
கண்களின் வடிவத்தையும், நிறத்தையும் மேம்படுத்திக் காட்டுவதற்காக உபயோகப்படுத்துவது.

மஸ்காரா:
கண் இரப்பை முடிகளை அடர்த்தியாகக் காட்டுவதற்கõகப் பயன்படுத்தப்படுகிறது. மாலை நேர ஒப்பனைக்கு சாலச் சிறந்தது. லிப்ஸ்டிக்: முக ஒப்பனையில் நிறைவுப் பகுதி உதடுகள் தான். பெரிய உதடுகளைச் சிறியதாக்கவும், மிகச் சிறிய உதடுகளைப் பெரியதாகவும் காட்ட உதவுகிறது.

லிப் லைனிங் பென்சில்:
கச்சிதமான உதடுகள் அமைய பெறாதவர்களுக்கு இது ஒரு 'சஞ்சீவி' என்று தான் சொல்ல வேண்டும். உதடுகளைப் பொருத்தமான அளவுக்குத் திருத்தி, பொலிவுறச் செய்வதே இதன் வேலை. அனைத்து ஒப்பனை சாதனங்களும் நல்ல தரமான தயாரிப்புகளாக இருத்தல் அவசியம். அதுதான் சருமத்திற்கு நல்லது. அழகுக்கு அழகு செய்யும் ஒப்பனை!! ....

Wednesday, February 23, 2011

பொட்டு வைப்பதில் பிரச்சினையா?


நம் உடலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் எத்தனை மெனக்கிட்டாலும் சில வேளைகளில் நம்மை அறியாமல் சில ஆபத்தான சாதனங்களை அழகுக்காக பயன் படுத்திக் கொள்கிறோம். கூடவே அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது 'ஓவ்வாமை'. அதனை தவிர்க்க சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.


பொட்டு வைப்பதால் சருமத்தில் பிரச்சினை ஏற்படுமா?

பொட்டு வைப்பதில் பொதுவாக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஆனால் பொட்டுகளை ஒட்ட வைக்கும் பசையின் தரத்தால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு. ரசாயன பொருளால் உருவாக்கப்பட்டிருக்கும் பசை, தொடர்ந்து நெற்றியில் ஒட்டியிருக்கும்போது அந்தப் பகுதி நிறம்மாறி, வடு உருவாகிவிடும்.

உயர்ந்த வகை பவுடர்களை பயன்படுத்தினால் முகத்தில் சரும நிற மாற்றம் ஏற்படுமா?

பவுடர் மூலம் நிரந்தரமான சரும மாற்றம் எதுவும் ஏற்படாது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் பவுடர் பூசாமல் இருப்பது நல்லது. பவுடரில் மணத்திற்காக சில ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவைகள் சிலருடைய உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. ஆனால் வெயில் சருமத்தில் விழுவதைத் தடுக்க சன் ஸ்கிரீன் கிரீம் பூசுவது நல்லது.

எண்ணை தேய்த்துக் குளிப்பது சருமத்திற்கு நல்லதா?

எண்ணை தேய்த்து குளிப்பது என்பது இந்தியாவின் ஒரு பகுதியில் இருக்கும் பாரம்பரிய பழக்கம். அதனால் சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும் என்பது உண்மைதான். வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு இது நல்ல பலனளிக்கும். ஆனால் எண்ணை சருமம் கொண்டவர்களுக்கு மேலும் எண்ணையை தேய்த்து எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. எண்ணையை தேய்த்துவிட்டு சோப்பு போட்டு குளிக்கும்போது சருமத்தில் இருக்கும் எண்ணையும் சேர்ந்து தண்­ணீரோடு போய்விடும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் குளித்த பின்பு, நனைந்த துணியால் சருமத்தில் இருக்கும் தண்­ணீரை ஒற்றி எடுக்கவேண்டும். அதன்பின்பு மிகக் குறைந்த அளவு எண்ணையை எடுத்து, லேசாக சருமத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்பு அதிகமாக எண்ணை பூசிக்கொள்வதைவிட, குளித்த பின்பு சிறிதளவு எண்ணை பூசிக்கொள்வதே சிறந்தது.

தினமும் எத்தனை தடவை குளிக்கவேண்டும்?

எத்தனை தடவை குளிக்கிறோம் என்பதை விட, உடலில் அழுக்கு சேரக்கூடாது என்பதுதான் முக்கியம். மூன்று நேரம் குளித்த பின்பும் உடலில் அழுக்கு நீங்காமலே இருந்தால் எந்த பயனும் இல்லை. வியர்வை, அழுக்கு, வேலை பார்க்கும் அல்லது வசிக்கும் சூழலுக்கு தக்கபடி உடலில் இருக்கும் அழுக்கை போக்கும் விதத்தில் குளிக்கவேண்டும். தினமும் இரண்டு தடவை குளிக்கலாம்.

முக‌ அழகை‌க் கூ‌ட்ட


5 அ‌ல்லது 6 ‌திரா‌ட்சை‌ப் பழ‌ங்களை முக‌த்‌தி‌ல் சாறு படுமாறு ந‌ன்கு தே‌ய்‌த்து ‌விடவு‌ம். கழு‌த்து‌ப் பகு‌திக‌ளிலு‌ம் தே‌ய்‌க்கவு‌ம். 15 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து ‌ப‌ச்சை‌த் த‌ண்‌ணீ‌ரி‌ல் முக‌த்தை‌க் கழுவவு‌ம்.


கடலை மாவுட‌ன் த‌ண்‌ணீ‌ர் அ‌ல்லது ‌கி‌ளிச‌ரி‌ன் சே‌ர்‌த்து ‌விழுதா‌க்‌கி அதனை முக‌த்‌தி‌ல் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் முக அழகு மெருகேறு‌ம்.

உட‌ம்‌பி‌ல் கறு‌ப்பாக இரு‌க்கு‌ம் மு‌ட்டி, மூ‌ட்டு‌ப் பகு‌திக‌ளி‌ல் த‌யி‌‌ர் அ‌ல்லது எலு‌மி‌ச்சை சாறை தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் ‌விரை‌வி‌ல் கருமை ‌நீ‌‌ங்கு‌ம்.

முக‌த்‌தி‌ல் பரு‌க்க‌ள் உ‌ள்ளவ‌ர்க‌ள் பே‌‌சிய‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம். பரு‌க்கைள ‌கி‌ள்ளுவதோ, அதனை சுர‌ண்டுவதோ த‌வறு.

கறு‌ப்பான தேக‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள், உடனடியாக வெ‌ள்ளையா‌க்குவோ‌ம் எ‌ன்று ‌விள‌ம்பர‌ங்களை ந‌ம்‌பி எ‌ந்த மரு‌ந்‌துகளையு‌ம் முக‌த்‌தி‌ல் போட வே‌ண்டா‌ம்.

ஆரோக்கியத்தின் கண்ணாடி சருமம்


அழகாய் இருப்பது அத்தனை பெண்களுக்கும் அவசியம். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்லும் பல பிரபலங்களைப் பாருங்கள் நேர்த்தியான அழகும் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும். 


அறிவையும் அழகையும் தன்னம்பிக்கையையும் ஒன்றாகக் கலந்து காட்டி, செயல்படும் பெண்களே சாதனைக்குரியவர்களாக உருவாகிறார்கள்.

அழகு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது சருமத்தின் நிறம். சிவப்பு நிறம் எல்லா பெண்களும் விரும்பும் நிறமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சருமத்தைப் பற்றி விஞ்ஞானபூர்வமாக எத்தனை சதவீத பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்?

மனித உடலில் இருக்கும் பெரிய உறுப்பு எது? சருமம்தான் உடலில் மிகப்பெரிய உறுப்பு. இஷ்டத்திற்கு நெகிழக்கூடியதும் அதுதான். ஒருவரது சருமம் 24 சதுர அடி சுற்றளவும், நான்கு கிலோவிற்கும் சற்று அதிகமான எடையையும் கொண்டது.

சருமம், உடலை மூடிப் பாதுகாக்கும் போர்வையா? அல்லது ஆபரணமா? இரண்டுமே இல்லை. சருமத்திற்கென்று முக்கியமான வேலைகள் நிறைய இருக்கின்றன. நன்றாக வெயிலடிக்கும் காலத்தில் உடலில் இருக்கும் தண்ணீர்தன்மை வற்றிவிடாமல் பாதுகாக்கும் சருமம், மழைக்காலத்தில் "வாட்டர் புரூப்" போல் செயல்பட்டு உடல் குளிர்ந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது.

சருமத்தில் இரண்டு முக்கிய பகுதிகள். வெளியே தெரிவது "எபிடெர்மிஸ்". உள்புறமாய் அமைந்திருப்பது, டெர்மிஸ். எபிடெர்மிசில் பல அடுக்குகள் உள்ளன. அதன் அடி அடுக்கில் இருக்கும் அடிப்படை செல்கள் நிரந்தரமாக உருவாகி பெருகிக்கொண்டே இருக்கும். புதிய செல்கள் பெருகி மேல் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது மேலே இருப்பவை டெட்செல்களாகி உதிர்ந்து கொண்டிருக்கும். ஒரு செல் புதிதாக புறப்பட்டு வந்து, உதிர்ந்து போக மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். உள்பகுதியில் இருக்கும் டெர்மிசில் பல்வேறு வகையான சுரப்பிகள், ரத்தக்குழாய்கள், மயிர்க்காலின் அடிப்பகுதி போன்றவைகளெல்லாம் இருக்கின்றன.

நுண்ணிய சிறு பகுதி சருமத்தில் மட்டும் ஒரு கோடி செல்கள் இருக்கும். ஒரு பெண்ணின் மொத்த உடல் சருமத்தில் 30 பில்லியன் செல்கள் இருக்கும். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) சருமத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் 50 ஆயிரம் சரும செல்கள் உதிர்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த பரிணாம மாற்றங்களால் ஒருவர் தன் ஆயுளில் 20 கிலோவரையான சருமத்தை உதிர்க்கிறார்.

சருமத்தில் புதிய செல்கள் உருவாகுவதும், பழையவை உதிர்வதும் எல்லா பருவத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 18 வயது பெண்ணுக்கு இந்த பரிணாம மாற்றங்கள் நிகழ இரண்டு வாரங்கள் போதும். அவர் ஐம்பது வயது பெண்மணியாகும்போது அந்த மாற்றங்கள் நிகழ ஐந்து வாரங்கள் வரை தேவைப்படும். வயது கூடும்போது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

சரும செல்கள் ஒருவகை இறப்பு நிலையை அடையும்போது, அதிலிருந்து கெரோட்டின் உருவாகிறது. இந்த கெரோட்டின்தான் நகம் மற்றும் முடியின் அடிப்படை. வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் தலை முடி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருக்கும். ஒரு மாதம் அது 1.25 செ.மீ. வளரும். தொடர்ந்து இப்படியே வளர்ந்து கொண்டிருக்காது. ஐந்து ஆறு மாதங்கள் கழித்து சிறிது காலம் ஓய்வெடுக்கும். சுழற்சி அடிப்படையில் பத்து சதவீத முடி ஓய்வெடுக்கும்போது 90 சதவீதம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும். ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும் முடிகளே குளிக்கும் போது உதிர்கின்றன. (அதனால் முடி உதிர்வதை நினைத்து ரொம்ப கவலைப்படாதீங்க)

முடி, கண்களின் கருவிழி, சருமம் போன்றவைகளுக்கு நிறம் தருவது மெலானின் என்ற ரசாயன பொருள். சூரிய கதிர்கள் சருமத்தை கடுமையாகத் தாக்கும்போது அது சருமத்தை பாதிக்காமலிருக்க மெலானின் உதவுகிறது. தொடர்ச்சியாக சருமத்தின் ஒரு பகுதியின் கடுமையான சூரிய கதிர்கள் பட்டால் அந்த பகுதியில் மெலானின் அதிகமாக உற்பத்தியாகி சருமம் கறுத்துப் போய்விடும்.

சருமத்தின் மென்மையும், நிறமும், சுருக்கமற்ற மினுமினுப்பும் ஆரோக்கியம் மற்றும் அழகின் வெளிப்பாடாக இருக்கிறது. வெளிநாட்டினரைப் போல் வெள்ளை நிறமாக சருமம் இருக்கவேண்டும் என்று அத்தனை பெண்களும் விரும்புகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அந்த நிறம் பல்வேறு துறைகளில் வெற்றிபெற படிக்கட்டு என்று நினைக்கும் பெண்களும் ஏராளம். ஆனால் வெள்ளை நிற சருமம் ஒரு சில நோய்களை வரவேற்பதாக இருக்கிறது. சருமம் வெள்ளையாக இருக்கும் வெளிநாட்டினருக்கு நம் நாட்டைவிட சரும புற்று நோய் அதிகம் வருகிறது. இந்த தொந்தரவிலிருந்து விடுபட தங்கள் சருமம் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லையே என்று வெளிநாட்டு பெண்கள் ஏங்குகிறார்கள். அதற்காகத்தான் கடற்கரை பகுதியில் படுத்து "சன் பாத்" எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகம் கறுக்காமலும், அதிகம் சிவக்காமலும் இருக்கும் சருமமே ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் ஏற்றதாக இருக்கிறது.

முகத்தை மனதின் கண்ணாடி என்று சொல்வார்கள். அதுபோல் சருமத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். உடலில் நோய்கள் இருந்தால் அது சருமத்தில் பிரதிபலிக்கிறது. சருமத்தின் நிறத்தை சிவப்பாக மாற்ற முடியுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

மெலானின் மற்றும் சில வர்ண கட்டமைப்புகளும் சேர்ந்து சருமத்திற்கு நிறம் கொடுக்கிறது. வாழ்க்கை சூழலும், சுற்றுச்சூழலும் இதற்கு ஒருவகை காரணம். குளிர்ச்சி அதிகமுள்ள நாடுகளில் நம் நாட்டு பெண்கள் சில வருடங்கள் வசித்தால் அவர்கள் சரும நிறமும் ஓரளவு கலராக மாறும். அதிக வெயிலடிக்கும் கால நிலையிலும், மாசு நிறைந்த சுற்றுப்புறத்திலும் வசித்தால் நிறம் கறுக்கவும் செய்யும்.

சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தினமும் இருமுறை குளித்தல், உடற்பயிற்சி செய்தல், உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்தல், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் சருமம் மினுமினுப்பாக இருக்கும். பெண்களின் சரும நிறத்தில் பாரம்பரிய பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. சருமத்தின் நிறத்தில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. என்றாலும் நவீன அழகுக்கலை பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் வீட்டிலே செய்யும் குறிப்பிட்ட பராமரிப்பு முறைகள் மூலம் நிறத்தை குறிப்பிட்ட அளவுவரை மேம்படுத்தலாம்.

தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவைகளை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மாறும் என்பது சரியா?

குறிப்பிட்டுச் சொன்னால் இதனால் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. இயற்கையான நிறத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. நன்றாக பராமரித்து, வெயிலில் செல்லாமல் இருந்தாலே சருமத்தின் நிறம் ஓரளவு மேம்படத் தொடங்கிவிடும். தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவை ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக செயல்படுகிறது. ஓரளவு நிறத்தை தரும் சக்தி இதற்கு இருக்கிறது. சிவப்பு நிறமான சருமத்தைக் கொண்டவர்களின் வாழ்க்கைமுறை முரண்பாடாக இருந்தால் அவர்கள் சருமத்தின் நிறமும் மாறிக்கொண்டிருக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாதவரை சரும நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. அழகான சருமத்தைப் பெற இன்னும் ஆலோசனைகள் உண்டு.

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க


பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்கலின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். 


ஒரு வெள்ளரித்துண்டு அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும்.இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

முக அழகுக்கு மெருகூட்டும் உதடுகள்


முக அழகுக்கு பெருகூட்டுவது உதடுகள் என்றால் அது மிகையாகாது. உதட்டில் 'லிப்ஸ்டிக்' தடவிக் கொண்டால் மட்டும் போதாது. மென்மையாகப் பராமரிக்கவும் வேண்டும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறவும் செய்யும்.


மற்றவர்கள் உபயோகிக்கும் 'லிப்ஸ்டிக்'கைப் பயன்படுத்துவது கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி 'லிப்ஸ்டிக்' உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமானதைத் தெரிவு செய்யுங்கள். 'லிப்ஸ்டிக்' போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள 'லிப்ஸ்டிக்'கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக மிக முக்கியம். 'லிப்ஸ்டிக்'கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. 'லிப் பிரஷ்'ஷின் உதவியாலேயே 'லிப்ஸ்டிக்' போட வேண்டும் முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினமும் வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு 1 தேக்கரண்டி பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர வறண்ட உதடுகள் குணமாகும். 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெயுடன் சிறிதளவு தேன், பன்னீர் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும். உதடுகளில் தடவிய 'லிப்ஸ்டிக்'கை நீக்க தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம். 'லிப்ஸ்டிக்' போடுவதற்கு முன் உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், 'லிப்ஸ்டிக்' நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் வறண்டு காணப்படும். உதடுகளுக்கு 'மேக்அப்' போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்: முதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு 'லிப்ஸ்டிக்' தடவினால் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

'லிப்ஸ்டிக்' உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் 'லிப் சால்வ்' உபயோகிக்கலாம். 'லிப்ஸ்டிக்' உபயோகிக்காமல் நேரடியாக 'லிப் கிளாஸ்' தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். 'லிப்ஸ்டிக்'கின் மேல் தான் 'லிப் கிளாஸ்' தடவப்பட வேண்டும்.

நீண்ட நேரம் அப்படியே இருக்க 'லிப் பேஸ்' தடவி விட்டு அதன் மேல் 'லிப்ஸ்டிக்' தடவ வேண்டும். 'லிப்ஸ்டிக்' போடும் போது அதன் நிறத்திற்கு ஏற்றதாக 'லிப் லைனரி'ன் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். சிவப்பு நிறத்தைச் சார்ந்த 'லிப்ஸ்டிக்'குகளுக்கு சிவப்பு நிற 'லிப் லைனரு'ம் உபயோகிக்கலாம். தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காகப் பயன்படுத்தலாம்.

'மாய்ஸ்சுரைசர்' இல்லாத 'லிப்லைனரை' 'லிப்ஸ்டிக்'காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு 'க்ரீம்' தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.

மெலிந்த உடல் பருமனாக:


மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம்.ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. 


அதுதான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும் 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?


இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். 


பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்

வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.

அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

ஒவ்வாமை

குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்

சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

முடி ஏன் உதிர்கிறது?


முடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.


தலை வாரும்போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா? வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா? நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா? பதட்டப்படாதீர்கள். முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.

வேதனைப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் இதோ ஒரு ஆறுதல். கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். மிக மெலிதான நுண்ணிய வெள்ளை உருண்டை ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஒரு சிறிய வெள்ளை உருண்டை இருந்தால் உங்கள் முடி இயல்பாகவே இருக்கிறது. அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு இல்லாமல் போனாலோ அல்லது முடி இழப்பு மட்டுக்கு மீறி இருப்பதுடன் அது தொடர்ந்தாலோ நீங்கள் சரும நோயியலார் அல்லது முடியியலார் ஒருவரைக் கண்டு ஆலோசனை பெறுவது நல்லது.

இன்றைக்கு முடி கொட்டுவதைத்தடை செய்யக்கூடிய ஒரே மருந்து ரோகெய்ன் தான். இது வெளி நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு மாத காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவு ரோகெய்ன் மருந்தின் விலை சுமார் ரூ. 5000/ ஆகலாம். முடியியல் துறையினர் உணவில் கவனம் செலுத்தச் சொல்வதுடன் ஓய்வு, அமைதி, உற்சாகம் போன்ற மனநிலை தொடர்புடைய செய்கைகளின் பயனையும் மிதமான உடற்பயிற்சியின் தேவை பற்றியும் குறிப்பிடுவார்கள்.

பல நேரங்களில் கீழ்க்கண்ட ஏதாவதொரு காரணத்தாலும் முடி கொட்டக் கூடும். ஆனால் இது தற்காலிகமானது தான். முயன்றால் தவிர்த்துவிட முடியும்.

இறுக்கமும், இழுவையும்:

முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. எனவே போனிடெயில் போடுகிறவர்களும், இழுத்துப் பின்னலிடுகின்றவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு:

உடலில் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கின்ற போது முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் முளைக்கும். கருவுற்றிருக்கும் காலத்தில் முடி கொட்டாமலிருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு உயர்ந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த பின்னர் முடி கொட்டுவதற்குக் குறைந்து விட்ட ஹார்மோன் காரணமாகிறது. ஆனால் இது ஐந்தாறு மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ சரியாகலாம். அதே போன்று நடுவயதுப் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்புக் குறைவதால் முடி எளிதாகக் கொட்டுவதுடன் அடர்த்தியும் குறைந்து விடுகிறது.

சோகை / காய்ச்சல்கள் / கருத்தடை மருந்துகள்:

உடலில் இரத்தம் குறைவாக இருந்து சோகை நோய் காணப்பட்டாலோ, அல்லது டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்களில் அடிபட்டு மீண்டிருந்தாலோ அன்றி வாய்வழி மற்றும் ஊசிவழிக் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தி இருந்தாலோ முடி கொட்டுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு, மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதானலாவது முடி கொட்டுகிறது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுங்கள்.

உணவு:

முடியின் வளர்ச்சியில் உணவின் பங்கு கணிசமாகவே உள்ளது. பெண்கள் தங்கள் உணவு முறைகளை அடிக்கடி மாற்றுவதனாலும், அளவுக்குக் குறைவாக உண்பதாலும் உணவில் ஊட்டச் சத்துக்கள் விட்டமின்கள் குறைவாக இருப்பதாலும் முடி கொட்டக் கூடும்.

முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்:

1. தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.

2. நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும், முடிக்கு தேவையான வைட்டமின் "சி" சத்துக்களையும் அளிக்கும்.

3. தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

4. சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும். மேற்கூறியவற்றுள் வசதிக்கேற்ப ஒன்றிரண்டு முறைகளை கையாளலாம்.

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்


நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய்.. வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?


பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்:

பால் பொருட்கள்:

பால் ஒரு கப் - (225 மிலி) 150 கலோரி
வெண்ணெய் 1 டீ ஸ்பூன் - 150
நெய் 1 டீ ஸ்பூன் - 45

பழங்கள்:

ஆப்பிள் (சிறியது) - 50-60
வாழைப்பழம் (நடுத்தரம்) - 100-120
திராட்சை பழங்கள் (சிறியது) 15-50-60
மாம்பழம் (சிறியது) - 100-120
ஆரஞ்சு (நடுத்தரம்) - 50-60

சமைத்த பண்டங்கள்:

அரிசி 25 கிராம் - 80
சப்பாத்தி 1-க்கு - 80
காய்கறிகள் 150 கிராம் - 80
வெஜிடபிள் பிரியாணி ஒரு கப் - 200

அசைவ உணவுகள்:

மீன் 50 கிராம் - 55
இறைச்சி - 75
முட்டை - 75
மட்டன் பிரியாணி ஒரு கப் - 225
கோழிக்கறி 100 கிராம் - 225

மற்ற பண்டங்கள்:

இனிப்பு பிஸ்கட் 15 கிராம் - 70
கேக் 50 கிராம் - 135
கேரட் அல்வா 45 கிராம் - 165
ஜிலேபி 20 கிராம் - 100
ரசகுல்லா - 140

பொதுவாக ஒரு மனிதன் இயங்குவதற்கு அவரது உடல் அமைப்பு, செய்யும் வேலையைப் பொறுத்து 4000 முதல் 7000 கலோரிகள் வரை தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம் செ‌ய்ய வே‌ண்டியது


குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல நோ‌ய்களை சரி செய்து விடலாம்.


குழ‌ந்தை ‌பிற‌ந்த 3 நா‌ட்களு‌க்கு‌ள் ர‌த்த‌ப் ப‌ரிசோதனை செ‌ய்து, குழ‌ந்தை ‌பிற‌‌க்கு‌ம் போது அத‌ற்கு தைரா‌ய்டு எ‌வ்வாறு உ‌ள்ளது எ‌ன்பதை சோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம். ‌பிறகு தைரா‌ய்டு குறைபா‌ட்டா‌ல், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

தைரா‌ய்டு குறைபாடு இரு‌ந்தா‌ல் இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

எ‌ன்சை‌ம் குறைபாடு இரு‌ப்‌பி‌ன், குழ‌ந்தைகளு‌க்கு க‌ண்புரை, மனவ‌ள‌ர்‌ச்‌சி குறைபாடு போ‌ன்றவை ஏ‌ற்படலா‌ம். இ‌வ்வாறு இரு‌ப்‌பி‌ன் குழ‌ந்தை‌க்கு உ‌ரிய ஊ‌ட்ட‌ச்ச‌த்து உணவு கொடு‌த்து கா‌ப்பா‌ற்ற முடியு‌ம்.

இ‌ந்த ர‌த்த‌ப் ப‌ரிசோதனையை பல மரு‌த்துவமனைக‌ள் க‌ட்டாயமா‌க்‌கியு‌ள்ளன. அ‌வ்வாறு இ‌ல்லாம‌ல் இரு‌ப்‌பி‌ன் பெ‌ற்றோ‌ர் இதனை செ‌ய்ய வ‌லியுறு‌த்தலா‌ம். குழ‌ந்தை ‌பிற‌ந்த மூ‌ன்று ‌தின‌ங்களு‌க்கு‌ள் அத‌ன் கு‌திகா‌லி‌ல் இரு‌ந்து ‌சிறு து‌ளி ர‌த்த‌த்தை எடு‌த்து இ‌ந்த ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்படு‌ம்.

இதனை செ‌ய்வதா‌ல் வரு‌ங்கால‌‌த்‌தி‌ல் வரு‌ம் ‌வியா‌தியை த‌ற்போது குண‌ப்படு‌த்தலா‌ம். இ‌ந்த ந‌ல்ல வா‌ய்‌ப்‌பினை பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது பெ‌ற்றோ‌ரி‌ன் கடமையாகு‌ம்

Tuesday, February 22, 2011

குழந்தை வளர்ப்பு குறித்த பொதுவான டிப்ஸ்


"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"


எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக் கனியமுதாய்ப் பிறந்து, முகம் பார்த்து சிரித்து, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, பிஞ்சுப் பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி, சிரித்து, அழுது, பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும் குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள், விருப்பு-வெறுப்புகள் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. பொதுவாக நம் எண்ணங்களை செயலாகின்ற செயலே பழக்கமாகின்றப் பழக்கமே வழக்கமாகின்ற வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ....

வீட்டில் குழந்தைகள்:

* எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.

* சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

* குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும்.

* எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.

* குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.

* எல்லாருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.

* குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.

* பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.

* குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.

* ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது.


பள்ளியில் பிள்ளைகள்:

* குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. அதிலும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ள, குறும்புகள் அதிகம் செய்யும் குழந்தையிடம், "ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், ராகினி மிஸ்கிட்டே நல்லா நாலு அடி கொடுக்கச் சொல்றேன்" என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும். அதற்குப் பதில் "நீ படிச்சு பெரிய ஆளாகணும், டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அன்பானவங்க, மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க. குருனா அது உன் டீச்சர் தான், உன்னைப் பெரிய ஆளாக்குறதுல அவங்க பங்கு தான் அதிகம்" என்று பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் இனிமையானவர்களாகக் காட்ட வேண்டும்.

* பிள்ளைகள் வகுப்பில் பின்தங்கி இருந்தால் அவர்களை அன்புடன் அணுகி புரியாத பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். மிரட்டக்கூடாது.

* பிள்ளைகள் தங்களைத் தவிர வேற்று மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தர வேண்டும்.

* பிள்ளைகள் மற்ற சக மாணவர்களுடன் போட்டி போடும் போது அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

* பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிக்கடி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

* குழந்தையின் பள்ளிப் பையில் நம் வீட்டு விலாசம், தொலைபேசி எண் அடங்கிய கார்டை வைத்து விட வேண்டும். ஒருவேளை குழந்தைகள் காணாமல் போனாலும் விலாசம் இருப்பதால் குழந்தை பத்திரமாக வந்து சேரும்.

* பெற்றோரைத் தவிர வேறு முகம் தெரியாத நபர்கள் அழைத்தால் செல்லக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி வைக்க வேண்டும்.

* பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தங்க நகைகள் அணிவித்து அனுப்பக் கூடாது.

* பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* சக மாணவர்களுடன் அன்பும் நட்பும் பாராட்டும்படி செய்ய வேண்டும்.


குழந்தைகளும் கல்வியும்:

* பிள்ளைகள் பள்ளிக்கூடப்பாடம் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் கண்டிப்பாக தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.

* பிள்ளைகள் படிக்கும் போது நாமும் அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைகளின் கவனமும் சிதறாது. படிக்கும் ஆர்வமும் அதிகமாகும்.

* பிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க விடக் கூடாது. அதற்குப் பதில் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.

* கோடை விடுமுறையில் குழந்தைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது சரிதான். ஆனால் ஒரே நேரத்தில் கராத்தே, பாட்டு, நடனம், யோகா என்று பலவித வகுப்புகளுக்கு அனுப்பும் போது குழந்தைகள் எதிலும் ஜொலிக்காமல் சோர்வடையக் கூடும். எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு சில வகுப்புகளில் மட்டும் சேர்த்து விடலாம்.

* "காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு" என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப மாலை வேளைகளிலே குழந்தைகளை விளையாடவும் விட வேண்டும்.

* அழகான ரோஜாவில் முட்களா? என்று சிந்திப்பது எதிர்மறை சிந்தனை, முட்களில் இத்தனை அழகான ரோஜாவா? என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனை. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

* பிள்ளைகளை ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கப் பழக்க வேண்டும். காலை நேரப் பரபரப்பில், "சீ எங்கே பாக்ஸ்" என்று பதட்டப்படத் தேவையில்லை.

* மனிதாபிமானம், அடுத்தவருக்கு உதவும் குணம் போன்றவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.

* நம் கோபம், அவசரம், பதட்டம் என்று எதனையும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது.

* குழந்தைகளிடம் பொறுமையும் கனிவும் மிகவும் முக்கியம்.


குழந்தைகளின் உணவும் ஆரோக்கியமும்:

* சுத்தம், சுகாதாரம், சத்துள்ள ஆகாரம் ஆகிய மூன்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

* பிள்ளைகள் தங்கள் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.

* சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கத்தியோ துன்புறுத்தியோ உண்ண வைக்காமல் சிறிது விட்டுப் பிடிக்கலாம்.

* ஒரே மாதிரி சமைக்காமல் குழந்தைகளுக்கு கேரட், பீட்ரூட் போன்ற விதவித வண்ண உணவுகளைச் சமைத்துத் தர வேண்டும். உணவை அவர்களுக்குப் பிடித்ததாக்க வேண்டும். உதாரணத்திற்கு ஏ, பி, சி போன்ற வடிவங்களில் தோசை வார்த்துத் தரலாம்.

* பாதாம்பருப்பைப் பொடித்து பாலில் கலந்து வாரத்திற்கு மூன்று முறை பிள்ளைகளுக்குக் கொடுத்து வர, அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். கேரட்டைத் துருவி தேனில் கலந்து கொடுத்தாலும் புத்திக்கூர்மை ஏற்படும்.

* தினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.

* கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது.

* தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகள் உணவு உண்ணும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக்கூடாது.

* உணவின் அருமையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்குச் சத்துள்ள ஆகாரங்களைக் கண்டிப்பாகத் தர வேண்டும். உண்ண மறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு எந்த விதமான உடல்-மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படின் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


குழந்தைகளும் சேமிப்புப்பழக்கமும்:

* பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையை இளம் வயதிலிருந்தே உணர்த்த வேண்டும்.

* பிள்ளைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.

* பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பண்டிகை காலங்களில் தரும் பணத்தை உண்டியலில் அவர்கள் கையாலேயே போட்டு வரச் செய்ய வேண்டும், பணம் சேர்ந்தவுடன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கித் தரலாம். அவர்களுக்குச் சேமிப்பின் அருமை தெரிவதுடன் தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்று மகிழ்ச்சியாக இருக்கும்.

* குழந்தை ஆசைப்படுகின்ற எல்லாப் பொருளையும் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. எது தேவையோ அதைத் தவிர மற்றவற்றைக் குழந்தையின் பிடிவாதத்திற்காக வாங்கித் தரக் கூடாது. குழந்தைக்குச் சிறு சிறு ஏமாற்றங்களும் கிடைத்தால் தான் பிற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பணத்தின் மதிப்பும் தெரியும்.

* செலவிற்குப் பணம் என்று தனியாகப் பிள்ளைகள் கையில் பணத்தைப் புரள விடக் கூடாது.


குழந்தைகளின் வெற்றி-தோல்வி:

* பிள்ளைகளின் எண்ணங்கள், கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுங்கள்.

* பிள்ளைகளின் மேல் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் திணிக்காமல் அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பல்வேறு போட்டிகளில் சேரச் சொல்லுங்கள்.

* பிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்களையும் மனம் திறந்து பாராட்டுங்கள். ஒவ்வொரு முறை பாராட்டு வாங்குவதற்காகவே நல்ல பழக்கங்களை மேற்கொள்வார்கள்.

* வெற்றியானாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் சரி, எல்லாமே வாழ்க்கையின் அங்கங்கள் என்பதைப் புரிய வையுங்கள்.

* பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்தாலும், நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும், போட்டியில் வெற்றி பெற்று வந்தாலும் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* பிள்ளைகள் எந்த விஷயத்திலாவது தோல்வியடைந்தால் திட்டாமலும் சோகத்தை வெளிக்காட்டாமலும் அடுத்த முறை வெல்லலாம் என்று ஊக்கப்படுத்துங்கள்.

* குழந்தைகளைப் பெருமையாக மற்றவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும்.

* ஆண் என்றால் உயர்ந்தவர், பெண் என்றால் தாழ்ந்தவர் என்ற பேதத்தையோ சாதியையோ பிள்ளைகள் மனதில் விதைக்கக் கூடாது.

* நாம் எப்படி நடக்கிறோமோ அது போலவே தான் பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள். எனவே பிள்ளைகள் எதிரில் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

* குழந்தை வளர்ப்பில் தந்தை-தாய் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது. பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் பெருமையில்லை. இளமையிலே அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும் தர வேண்டும்.

குறை பிரசவமு‌ம் குழ‌ந்தை பா‌தி‌ப்பு‌ம்


எல்லோருக்கும் இனிமையான பிரசவம் நிகழவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சுமார் 12 முதல் 18 விழுக்காட்டினருக்கு குறை பிரசவமாகி விடுகிறது.


இயல்பான எடையான இரண்டரை கிலோவுக்கு குறைவான எடையுடன் குழந்தை பிறந்தால் அது எடை குறைந்த குழந்தை அல்லது குறை பிரசவக் குழந்தை எனப்படுகிறது.

ஏழு மாதத்திற்குப் பிறகு திடீரென எப்போதாவது சிறுநீர் கசிவது அல்லது பெருக்கெடுப்பது போன்றே பனிநீர் வெளியேறுவதைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை குறைபிரசவக் குழந்தையாகும்.

ஒருமுறை கருத்தரித்து குறை பிரசவத்தில் குழந்தை பெற்றிருந்தால் மறு முறையும் அவ்வாறு நிகழ வாய்ப்பு இருக்கிறது.

குழந்தையைப் பார்த்ததும் இது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையா என்பதை சொல்ல வேண்டுமா?

குழந்தையின் தோல் சிவந்து, சதைப்பிடிப்பில்லாமல் மெலிந்தும், கைகால்கள் சிறுத்து தலை மட்டும் பெரியதாகவும் இருக்கும்.

ஆண் குழந்தையாக இருந்தால் விரைப்பை கருப்பாக மாறாமல் சிவப்பாக இருக்கும். பெண் குழந்தையின் யோனிச் சிறுஉதடுகள் பெரிதாக விரிந்து வீங்கியும், யோனிப் பெரு உதடுகள் ஒடுங்கியும் காணப்படும்.

குழந்தையின் உடம்பில் லானுகோ எனப்படும் பூனை மயிர்கள் அதிகமாக காணப்படும். குழந்தைக்கு உடல் அசைவுகள் எதுவும் இருக்காது.

நீளவாக்கில் 49 செ.மீ. இருக்க வேண்டிய குழந்தை 45 செ.மீ. அல்லது அதற்குக் ககுறைவாக இருக்கும். அதாவது வாரத்திற்கு இரண்டரை செ.மீ. குறைந்து காணப்படும்.

உதாரணமாக 34வது வாரத்தில் பிறந்த குழந்தை நாற்பத்தான்னரை செ.மீ. நீளம் மட்டுமே இருக்கும். இக்குழந்தை பாலை உறிஞ்சிக் குடிக்காது. விரைவில் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் குழந்தையின் தொடையில் முன் எலும்பு வளர்ந்திருக்காது.

குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தால் என்ன என்று சிலர் நினைக்கலாம். குறை பிரசவ குழந்தைக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து மரண விகிதம் அதிகரிக்கும்.

750 கிராம் எடைக்கும் கீழ் இருந்தால் நூறில் எட்டு குழந்தைதான் பிழைக்கும். இந்தக் குழந்தைகளில் அறுபது விழுக்காட்டினர் பிறந்த 48 மணி நேரத்திற்குள் இறந்துவிடுகிறார்கள்.

750 கிராம் முதல் ஒரு கிலோ வரையுள்ள குழந்தை பிழைக்க 30 விழுக்காடு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

ஒன்று முதல் ஒன்னரை கிலோ எடையுள்ள குழந்தை பிழைக்க 40 விழுக்காடு வாய்ப்பிருக்கிறது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பராமரிப்பது கடினமாகும். குழந்தையின் உடல் திறனும், அறிவுத் திறனும் சில வேளைகளில் பாதிக்கப்படலாம்.

அடுத்த பத்தாண்டுகளில் குழந்தை இறந்துபோக அதிக வாய்ப்பிருக்கிறது. மூளை வளர்ச்சியில்லாத நிலை, கண் பார்வை பாதிக்கப்படுவது போன்றவை இந்தக் குழந்தைகளுக்குத்தான் அதிகமாக வரும்.

எந்த இளைஞனை காதலிக்க கூடாது??


நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும்.


உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும். திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும்.

அழகாக கவர்ச்சியாக இருக்கிறான் என்பதற்காக எந்த ஓர் இளைஞனையும் பெண்கள் காதலிக்கக் கூடாது. அழகு என்பது இனிப்பு பலகாரங்களுக்கு போடப்படும் வண்ணம் போன்றது. வண்ணம்தான் பண்டத்திற்குக் கவர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் வண்ணம் இல்லாததினாலேயே தின்பண்டத்தின் சுவை கெட்டுவிடப் போவதில்லை.

தின்பண்டத்தில் கலந்துள்ள இனிப்பு போன்றது ஓர் இளைஞனின் குண நலன்கள். இனிப்பு இல்லாவிட்டால் தின்பண்டமே இல்லை என்பது போல, வாழ்க்கைக்கு எழில் சேர்ப்பது கணவராக வருபவரின் குணநலன்தான். ஆகவே தங்கள் காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.