Showing posts with label free health tips. Show all posts
Showing posts with label free health tips. Show all posts

Thursday, March 29, 2012

கோடையில் குளு குளு


கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது. வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து தடவிக் கொள்ளலாம்.

உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் அறைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு கழுவலாம். உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது.

வெயில் பட்டு முகம் கறுத்துப் போய் விட்டதாக உணர்பவர்கள் இந்த உருளைக்கிழங்கு பேக்கை முகத்தில் போட நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த சீசனில் பழங்கள் எளிதாகக் கிடைக்கும்.

கோடையின் கடுமையைப் போக்குவதில் முதலிடம் வகிப்பவை வாழைப்பழம் மற்றும் தர்பூசணி பழங்கள். இவற்றைக் கொண்டு பேஸ்பேக்குகள் தயாரிக்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து அரை ஸ்பூன் பால் சேர்த்து சில துளிகள் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டப்பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். தர்பூசணி பழத்தைக் கொண்டும் பேஸ் பேக் தயாரிக்கலாம்.

தர்பூசணி பழத்துடன் பால் சிறிதுதேன் சேர்த்து முகத்தில் தடவிக் கொண்டு 20 நிமிடங்கள் உலரவிட்டு முகத்தைக் கழுவலாம். இந்த தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே தயாரிப்பது எளிது.

அவ்வப்போது பிரஷ்ஷாகத் தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும். இந்த வகை பேஸ்பேக்குகள் ஓரளவு கோடையின் கடுமையைப் போக்கக் கூடியவை.

நாள் முழுவதும் வெயிலில் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கன்றிக் கறுத்து விடுவது இயற்கை. இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.

கோடை வெயிலில் போய் விட்டு வந்த பின் கண்கள் உஷ்ணத்தால் எரிகிறதல்லவா? வெள்ளரிக்காயை சிலைஸாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடுக்க கண் எரிச்சல் நீங்கும்.

இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்து கொள்வதன் மூலமாகவும் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

இள நரையைப் போக்க வேண்டுமா


இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.


முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும்.


இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும். சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம்.

முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில். கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும். இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

Thursday, March 3, 2011

ஆரோக்கியமான வாழ்வுக்கு நடைப்பயிற்சி


பொதுவாக நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பான சில கேள்விகளும் பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.


1. நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?

நிச்சயம் சாப்பிடலாம் கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :

 முழுதானிய (ஓட்ஸ், அவல்) சிற்றுண்டி

 முழு கோதுமை பிரட்

 வாழைப்பழம்

 சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும். கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது.

 நடப்பதற்கு 1 மணி நேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்.

 சாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.

2. ஒரு மணிநேரம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் செலவாகும்?

இது நாம் நடக்கும் வேகம், தூரம், நடப்பவரின் உடல் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். பொதுவாக 300 கலோரிகள் செலவிடப்படும்.

3. நடையில் வேகம் எப்படி இருக்க வேண்டும்?

நடையை மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத்தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இதுவே உடலுக்கு நல்லது.

நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந்து இருந்தால் இதயமும், இரத்த ஓட்டமும் சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

4. நல்ல நடைப்பயிற்சி தூரம் எவ்வளவு?

பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.

5. நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா?

 பளு இல்லா நடையே சிறந்தது.

 கைகளில் எடையுடன் நடந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.

 இரத்த அழுத்தம் கூடும்

 மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம்.

 தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது.

6. நடக்கும் ஷு எப்படி இருக்க வேண்டும்?

 குதிகால் உயரம் கூடாது.

 சரியாகப் பொருத்த வேண்டும்

 ஷுவின் அடிப்பாகம் வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

 ஷு எடை குறைவாகவும், காற்றோட்டத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.

7. ஷுவை எவ்வளவு நாட்களுக்கொருமுறை மாற்ற வேண்டும்?

6-12 மாதத்துக்கொருமுறை மாற்றுதல் நலம். அதிகம் நடப்போர் இதற்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷு பாதிக்கப்படும். ஆûயால் 2 ஷு வைத்துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷுவும், அடுத்த நாள் மறு ஷுவும் என உபயோகித்தால் ஷுவில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.

8. நடைபயிற்சியால் ஓட்டப் பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன்கிடைக்குமா?

கிடைக்கும். வேகமாக நடத்தலில் ஓட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கின்றன.

9. நாம் நடக்கும் வேகத்தை எப்படிக் கணக்கிடுவது?

 இதனைக் கருவிகளின் உதவி இல்லாமலேயே கணக்கிடலாம்.

 ஒரு நிமிடத்துக்கு நீங்கள் நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளவும். அதனை 30 ஆல் வகுக்க வேண்டும்.

 உதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து வைத்தால், 60/30=2, அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல்.

 எல்லோராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறைந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சியில் கிடைக்கும் முழுப் பலனையும் தரும்.

 மேலும் சாதரணமாக 2 மைல் வேகத்தில் நடப்பது, மூட்டுக்களின் மேல் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.

 ஆகையினால் வயதானவர்கள், கால் வலியுள்ளவர்கள் மெதுவாக நடப்பதே போதும்.

10. நடைப் பயிற்சியின் போது கால் அரிப்பு ஏற்படுகிறதே, ஏன்?

குறைந்த இரத்த ஓட்டத்தினால் காலில் அரிப்பு ஏற்படலாம். அது நடக்க நடக்க இரத்த ஓட்டம் அதிகரித்து சரியாகிவிடும்.

பொதுவாக வியர்வையால் அரிப்பு அதிகரிக்கும். இப்படி இருந்தால் உங்கள் கால் தோல் வறட்சியாலும் இருக்கலாம்.

இதற்கு வாசலின் போன்ற தோலை உலர விடாமல் தடுக்கும் களிம்பு, எண்ணைகள் தடவலாம்.
Share380

உடல்நலம் பேணுதல் குறித்த ஒரு சிறுகுறிப்பு


நமது நல்ல ஆரோக்கியமான உடல் நலனுக்கு கனிகள் மிகவும் அவசியம். பழச்சாறுகள் 100 விழுக்காடு வரை நமக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தருகின்றன.


பச்சைக் கனிகளில் மினரல்கள் மற்றும் வைட்டமின் பி அடங்கியுள்ளது. இது உடல் குருதி ஓட்டத்திற்கு மிகவும் நல்லது.

சிவப்பு கனிகள் உடல்நலத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாதவாறு காத்து நிற்கிறது. தக்காளி, தர்பூசிணி மற்றும் strawberry போன்றவை இதில் அடங்கும்.

மஞ்சள் நிறக் கனிகள் கண்புரை வராது காத்து நிற்கிறது. மஞ்சச் சோளம், அன்னாசி மற்றும் ஆரஞ்சுப் பழங்கள் இதில் அடங்கும்.

பழச் சாறுகளின் சில பழங்கள்:

ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டால் புற்று நோய் வருவதை தடுத்துக் கொள்ளலாம்.

காரட், சர்க்கரை வள்ளி போன்றவை கண்களுக்கும் நல்லது. இதில் வைட்டமின் ஏ நிறைய உண்டு.
வெள்ளை மற்றும் பச்சை நிறக் கனிகளில் தாதுச் சத்துக்கள் நிறைய உண்டு. வெங்காயம் மற்றும் பூண்டு இதில் அடங்கும்.

பாக்டீரியா மற்றும் காளான் தீங்கு இல்லாமல் இது நம்மைக் காக்கும் சிவப்பு மற்றும் நீல நிற கனிகள் ரத்த ஓட்டம் மற்றும் இருதயத்திற்கு மிக்க நல்லது. ஆப்பிள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

Wednesday, March 2, 2011

வெப்பம் தணிக்கும் வெண்டை


வெயில் காலத்தில் நீர்ச்சத்துள்ள பழங்களையும், பானங்களையும் தேடி உட்கொள்ளும் நாம் நீர்ச்சத்துள்ள, மருத்துவ குணங்களை உள்ளடக்கிய சில காய்களை சாதாரணமாக எண்ணி தவிர்த்துவிடுகிறோம். இதனால் எளிய மருத்துவ குணமுள்ள காய்களினாலேயே பல மருத்துவ பலன்களை பெறமுடியால் போய்விடுகிறது.


கோடையில் உடல் மற்றும் சுற்றுப் புற வெப்பம் அதிகரிப்பதால் இயல்பாகவே கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், தோல் மற்றும் உதடு வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் குறைந்து ஒருவித சோர்வும், உடல் முழுவதும் சூடாக இருப்பதுபோன்ற உணர்வும் ஏற்படுகிறது.

மியூசிலேஜ் எனப்படும் ஈரப்பதம் நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் உட் கொள்வதால் நமது உடலின் நீர்ச்சத்து விரயமாவது தடுக்கப்படுகிறது. செல்களிலுள்ள திரவமும், செல்லைச் சுற்றியுள்ள திரவமும் சமச்சீரான நிலையை அடைவதால் உடலின் வெப்பம் தணிந்து, எப்பொழுதும் குளுமையாக உணர்கிறோம்.உடலின் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைக்கும் பலகாய்கள் ருசியாக இல்லாததால் அவற்றை தவிர்த்துவிடுகிறோம். ஆனால், நீர்ச்சத்து நிரம்பிய காய்களில் நார்ச்சத்தும் அதிகம் காணப்படுவது அறிவியல் பூர்வமான உண்மை.

இதனால் இருவிதமான பலன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக உடலின் திரவ சமநிலை நிலைப்படுத்தப் படுவதுடன் நார்ச்சத்துள்ள உணவுகளினால், குடல் மற்றும் மலவாய்ப் பகுதிகள் சுத்தமடைகின்றன. மலச்சிக்கல் மற்றும் மலக்கட்டு நீங்குகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. அவற்றிலுள்ள நார்ச்சத்து இறுகலான மலத்தை இளக்கி மலம் கழித்தலை எளிதாக்குகிறது.

ஏபிலோமோசஸ் எஸ்குலன்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த பிஞ்சு வெண்டைக்காயே, மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் அடங்கியுள்ள குர்சிட்டின், ஹைப்பரின், புரோ ஆன்தோசயனிடின், டிகுளோக்கோரனிக், கேலக்டோரோனிக் அமிலம் ஆகியன செல்களின் திரவ இழப்பை கட்டுப்படுத்தி, குடல் மற்றும் சதைப்பகுதிகளில் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. முற்றாத பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டுவர புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிராம்பாசிடிவ் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்காய்க்கு உண்டுஎன நிரூபிக்கப்பட்டுள்ளது. முற்றிய வெண்டைக்காயை அதிகம் உட் கொண்டால் மலம் மிகவும் இளக்கமாகி, கழிச்சல் உண்டாகும். ஆகவே நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெண்டைக்காயில் முற்றாத பிஞ்சுக்காயே சமையலுக்கும் மருந்துக்கும் உகந்ததாகும். பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாட்டுச்சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியடையும். சிறுநீர் எரிச்சல், மலச்சிக்கல், தோல் வறட்சி, மலவாய் எரிச்சல் நீங்கும்.

கோடைக்காலத்தில் அக்குள், மலவாய்பகுதி, முதுகு, தொடை போன்றவற்றில் ஏற்படும் கட்டிகளை கரைக்க பிஞ்சு வெண்டைக்காயை நன்கு அரைத்து, லேசாக வதக்கி, கட்டி உள்ள இடங்களில் தடவிவர கட்டிகள் உடையும். பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, ஞாபகசக்தியை நீடிக்கச் செய்யலாம்

பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி



ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல... ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.


சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.

பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.

பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?

சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.

ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு... பெர்ஃப்யூம் வேறு!

பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.

வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?

சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.

கவனத்தில் வையுங்கள்:

சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.

சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.

எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.

பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?

நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா?

Axe

பெண்களின் ஃபேவரைட்?

ஜோவன் வொய்ட் மஸ்க்

மேக்ஸி - ப்ளூ லேடி

விக்கல் ஏன் ஏற்படுகிறது


மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புக் கூடு விரிய வேண்டும். இதற்கு துணை புரிய வெளிய மார்புத் தசைகள் சுருங்க, உதரவிதானம் சுருங்கி கீழிறங்க நுரையீரல்கள் இரண்டும் விரியும்.


அப்போது நுரையீரல்களில் காற்றின் அழுத்தம் குறைவதால் வெளிக்காற்று குரல் நாண்களை நன்றாகத் திறந்துகொண்டு மூச்சுக் குழாய் வழியாக நுரையீரல்களுக்கும் நுழையும். இது இயல்பாக நிகழும் நிகழ்வு.

சில சயமங்களில் மார்புத் தசைகள் போதுமான அளவிற்கு சுருங்காது. உதரவிதானம் சரியாக கீழிறங்காது. குரல் நாண்கள் நன்றாகத் திறக்காது. இம்மாதிரி சமயங்களில் மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில் மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் நுழை வேண்டும். அப்போது ஒருவித விநோத ஒலி உண்டாகும். அதுதான் விக்கல்.

சாதாரணமாக நாம் அளவிற்கு மீறி அல்லது அவசரமாக உணவு உட்கொண்டால் விக்கல் வரும். தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.

அதேசமயம், சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

Tuesday, March 1, 2011

பெண்களை காதலிப்பது எப்படி?


1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

2 முறை பிரஷ்... நாள் முழுக்க பிரெஷ்


பொலிவான முகம், நிறத்துக்கு ஏற்ற உடை, ஸ்டைலான பேச்சு என பார்த்த நொடியில் சென்டம் மார்க் போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருத்தரிடமும் இருக்கும். இவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் புற அழகில் செலுத்தும் கவனத்தை அகத்தில் கோட்டை விடுவது அபத்தம். 


இவர்கள் வாயில் இருந்து வீசும் துர்நாற்றம் சென்டம் மார்க்கை ஜீரோ நிலைக்கு மாற்றி விடும். எல்லா விஷயத்துக்கும் மற்றவரிடம் பேசியாக வேண் டிய சூழலில் இருப்பதால் வாயை கவனிப்பது முக்கியம் என்கிறார் ஈறு அறுவை சிகிச்சை நிபுணர் அருண்குமார் பிரசாத்.

பல் பிரச்னைகள் எதுவும் பரம்ப ரைப் பிரச்னை கிடையாது. வாய் துர்நாற்றம் பிரச்னைக்கு முழுக்க முழுக்க அவரவரே காரணம். பல் மற்றும் ஈறுகளில் படியும் அழுக்கின் காரணமாகத் தான் பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் உருவாகிறது.

பற்களில் ஆரம்பத்தில் சிறு கரும்புள்ளி போல அழுக்கு படியும். இது முதலில் சாப்ட் நேச்சராக இருக்கும். இதனை சரிவர சுத்தம் செய்யாமல் விடும்போது கடினமான அழுக்காக மாறி விடும். இதனை பல் துலக்குவதன் மூலம் சரி செய்ய முடியாது. பல்லில் படிந்த அழுக்கை அப்படியே விட்டு விட்டால், அந்த கரும்புள்ளி பெரிதாகிவிடும். சாப் பிடும் போது கூசும்.

அந்த இடத்தில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டு அடிக்கடி இம்சைப் படுத்தும். இதன் எல்லை தான் பல் வலி. சிறிய அள விலான அழுக்கு, பல்வலி எனும் பெரிய பிரச்னையாகும் வரை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. சிறிய புள்ளி உருவாகும் போதே கவ னித்து அடைத்து விடுவது நல்லது. இதே அழுக்கு ஈறுகளில் படிவதன் அடையாளம் தான் பல்லில் இருந்து ரத்தம் வடிவது. ஈறு பிரச்னையை கவனிக்காமல் விட்டால் சீழ் கட்டி கள் உருவாகி வயிற்றையும் தாக்க வாய்ப்புள்ளது.

வாய் நாற்றத்துக்கு இன்னொரு காரணம் குடல் புண் மற்றும் குடல் புழுக்கள். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டாலும் இந்த சங்கடத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும். எனவே வாய் நாற்றம் உள்ளவர்கள் டாக்டரை அணுகி அதற்கான கார ணத்தை கண்டறியுங்கள். வயிற்றில் பிரச்னை இருந்தால் அதை சரி செய்வதன் மூலம் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும், என்கி றார் ஈறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண்குமார் பிரசாத்.

பாதுகாப்பு முறை:

தினமும் கட்டாயம் 2 முறை பல் துலக்கவும். பல் துலக்க பயன்படுத்தும் பிரஷ்சை 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும். அனைவருக்குமே சாப்ட் வகை பிரஷ்கள் ஏற்றதாக இருக்கும். பல் சொத்தை அல்லது பல் பிரச்னை என்றவுடன் குழந்தைகள் சாக்லேட் சாப்பிட தடா போடுகிறோம். ஆனால் அப்படி தடை செய்ய தேவையில்லை. சாப்பிடும் போது பல்லில் ஒட்டிக் கொள்ளாத சாக்லேட் வகைகளை அனுமதிக்கலாம்.

பற்களில் சாக்லேட் ஒட்டினால் உடனடியாக வாய் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ள குழந்தைகளை பழக்க வேண்டும். 14 வயது வரை பற்கள் விழுந்தாலும் மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் பல் சொத்தை ஏற்பட்டாலும் சிலர் கண்டுகொள்வதில்லை. பால் பல்லில் சொத்தை ஏற்பட்டு அந்த இடத்தில் உள்ள பல் விழுந்து விடும்போது புதிய பல் முளைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

பற்களில் சொத்தை எந்த வயதில் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். வலியின்றி விரைவில் குணமாகக் கூடிய நவீன லேசர் சிகிச்சைகள் தற் போது உள்ளன. அதேபோல் பல் மற் றும் ஈறு பகுதியில் அழுக்கு படிவது தெரிந்தால் சாப்டாக இருக்கும் போதே சரி செய்ய வேண்டியது அவசியம். அதேபோல் வாய் நாற்றத்தை தவிர்க்கவும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. எனவே காலை முதல் மாலை வரை பிரஷ்ஷாக உணர வாயை கவனிக்க வேண்டியதும் அவசியம் என்கிறார் டாக்டர் அருண்குமார் பிரசாத்.

டை அடித்துவிட்டுக் குளிக்கலாமா


கூடுமானவரை ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில், அழகு நிலையங்களில் போடுவது நல்லது. பாலிமர் டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். அது தானாகவே பரவிக்கொள்ளும்.


அநேகம்பேர் ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கிறார்கள். பிரஷில் டையை எடுத்து தட்டையாகவே போடுகிறார்கள். அப்படிப் போடுவது முறையல்ல. பிரஷ் உபயோகப்படுத்துகையில் காற்று உள்ளே போகாது. எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும்.

சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள். சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள். இது மிகவும் தவறான முறை. ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும். (15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.)

தலையை அலசும்போது தரமான ஷாம்புடன் கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள். எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம்.

கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது.

ஆண்களில் சிலருக்கு மீசை மட்டும் வெள்ளை வெளேர் என்றிருக்கும். அதற்காகத் தற்பொழுது பிரஷுடன் சேர்ந்த டை வந்துள்ளது. மீசையை ட்ரிம் செய்யும்போது பிரஷ் செய்து டை போட்டுவிடலாம்.

தற்பொழுது 'பெர்மனென்ட்' டை வந்திருக்கிறது. முடி இருக்கும் இடத்தில் பெர்மனென்ட் டையைத் தடவும்போது அப்படியே இருக்கும். ஆனால் முடி புதிதாக வளர்கிற இடத்தில் வெள்ளையாக இருக்கும். எனவே அதற்குத் தகுந்தாற்போல் டையைப் பூசிக்கொள்ள வேண்டும்.

ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னாவை அடிப்படையாக வைத்தும் ஹேர் டை வந்துள்ளது.

ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. நேரான முடிக்கு மட்டுமே ஒத்து வரும். ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும். முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும்.

மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான ஹென்னாவை உபயோகப்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா - 250 கிராம்
ஒரு முட்டை - வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில் - 2 டீ ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன் - 2 ஸ்பூன்

(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)

நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம்
தயிர் - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு - 5லிருந்து 8 சொட்டுகள்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்.

புற்று நோய்க்கு மனிதனே காரணம்


புற்று நோய் ஏதோ இனம்புரியாத இயற்கை விளைவுகளால் ஏற்படுவதல்ல மாறாக மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட அதிநவீன வாழ்வுதான் காரணம் என்று மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள உடல்ரீதியான மாற்றங்களே சமீப புற்று நோய்க் கட்டிகளுக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இதனை உறுதி செய்ய அவர்கள் எகிப்திய மம்மிக்களை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். நூற்றுக்கணக்கான மம்மிக்களை ஆய்வு செய்ததில் ஒரேயொரு மம்மியில் மட்டும் புற்று நோய் இருந்தது உறுதியானது.

பண்டைய எகிப்திய பிரதிகளில் காணப்படும் புற்று நோய்ப் போன்ற நோய்க்கான குறிப்புகள் அனைத்தும் குஷ்ட ரோகத்தினால் ஏற்படும் உடல் ரீதியான அறிகுறிகளை புற்று நோய் என்பதாக அது கூறியுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் தலைவரான மைக்கேல் ஸிம்மர்மேன் மாம்மிக்களில் கட்டிகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என்பதால் புற்று நோய் அந்தக் காலக்கட்டத்தில் இல்லை என்று கூறமுடியும் என்று கூறுகிறார்.

"இதனால் புற்ற்நோய் அல்லது புற்று நோய் உருவாக்கக் காரணிகள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய வாழ்வு முறையே என்று நாம் கருத இடமுண்டு" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"சுற்றுசூழலில் இயற்கையாக உள்ள எந்த ஒரு கூறும் புற்று நோய்க்கு காரணமாக இருக்கவில்லை. இதனால் இது மனிதனால் ஏற்பட்டுள்ள சீரழிந்த, மாசாகிப்போன சூழ்நிலைகளால் உருவானதே" என்று நாம் கூற முடியும்." என்று சக ஆய்வாளரும் பேராசிரியருமான ரொசாலி டேவிட் கூறுகிறார்.

அதாவது எய்ட்ஸ், புற்று நோய் என்பதெல்லாம் ஆதிகாலம் தொட்டே இருந்து வருபவை என்ற பொய்யை மருத்துவ ஆய்வும் கார்ப்பரேட் ஆய்வும் கூறிவரும் இந்த நிலையில் புற்று நோய்க்கு ஒரு வரலாற்றுப் பார்வையை அளிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு காலத்தின் உடல்களை ஆய்வு செய்ததில் நவீன சமூகங்களுக்கு கிடைத்த செய்தி என்னவெனில் "புற்று நோய் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதே" என்பதுதான் என்று இந்த ஆய்வாளர்கள் அடித்து‌க் கூறுகின்றனர்.

Monday, February 28, 2011

ஜெயித்தால் பாராட்டுங்கள்; தோற்றால் தட்டிக்கொடுங்கள்


விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.


சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மீதமுள்ள 13.3 சதவீதம் பேர்தான், விரல் சப்புவது குழந்தையின் வளர்ச்சியின் ஒரு கட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.

ஒரு குழந்தையிடம் விரல் சப்பும் பழக்கம் ஆரம்பத்தில் இருந்தாலும், படிப்படியாக அதில் இருந்து அதை விடுபட வைத்துவிடலாம். அதுவரை பெற்றோர்தான் கம்பை தூக்காமல் இருக்க வேண்டும், குழந்தையை அடிக்க!

பொதுவாக 3 வயதுக்குமேல் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். 6 வயதுக்குமேல் அதன் குணம், செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். அதனால், குழந்தையை சரியாக ஹேண்டில் செய்வது அவசியமாகிறது.

பெற்றோருக்கு பக்குவமான பத்து டிப்ஸ்:

* ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும்.

* அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக 'மெய்ன்டெய்ன்' செய்து வரவேண்டும். 6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது.

* மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். 18 வயது ஆகும்வரை ஒரே டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.

* அடுத்து முக்கியமானது பணம். பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது. வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. 'பாக்கெட் மணி' கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும்.

* குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது. குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். ஸ்கூல் டீச்சர், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும்.

* குழந்தையை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. அவ்வப்போது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். தினமும் 'வாக்கிங்' அழைத்துச் செல்வதும் அவசியம்.

* குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். இதற்காக, அம்மா, அப்பா இருவரும் ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி யாரேனும் ஒருவர் தோற்பதுபோல் நடித்து, 'இதெல்லாம் சகஜம். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்' என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

* பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினை எப்படி வந்தது? ஏன் வந்தது? அதற்கு என்ன தீர்வு? இந்த மூன்று விஷயங்களையும் தைரியமாக அணுக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

* குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது.

* கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது.

மொத்தத்தில், அறிவு, அன்பு, உணவு இந்த மூன்றையும் உங்கள் குழந்தைக்கு எப்பவும் கொடுக்க தயாராக இருங்கள். குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். உங்கள் குழந்தையும் நல்ல குழந்தைதான்!

கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்


இன்றைய அவசர யுகத்தில் கிடைத்ததை உள்ளே தள்ளிவிட்டு அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக ஓடிக்கொண்டிருப்பவர்கள் சில ஆண்டுகளிலேயே உடல் பருமன், தொப்பை என பல பிரச்சனைகளை சந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.


மேற்படி உடல் பருமன் மற்றும் தொப்பை போன்றவை எட்டி பார்த்த பின்னர்தான், சாப்பிடும் உணவு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு எட்டி பார்க்கிறது.

அப்படியானவர்களுக்கான கொழுப்பைக் குறைக்கும் மற்றும் அதற்கு எதிராக போராடும் உணவு பட்டியல் இதோ:

ஓட்ஸ்:

உடல் மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில் முதன்மையாக இடம்பெறுவது இது.நார்சத்து மிகுந்த இந்த ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது.

ஓட்ஸில் 'பீட்டா-குளூகான்'என்ற ஒருவகையான சிறப்பு நார்ச்சத்து அடங்கியுள்ளது. இந்த நார்சத்து நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க மிகவும் உதவுகிறது. அதே சமயம் நல்ல கொழுப்பின் அளவு மாறாமல் அப்படியே இருப்பதுதான் இதிலுள்ள தனி சிறப்பு.

இருதய நோய் வராமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உலகம் முழுவதுமுள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே முழு தானிய உணவு இந்த ஓட்ஸ்தான்.

உடலில் மிக அதிக கொழுப்புடையவர்கள் கூட (220 மில்லி கிராமுக்கும் மேல்) நாளொன்றுக்கு வெறும் 3 கிராம் ஓட்ஸை - அதாவது ஒரு சிறிய கிண்ணம் அளவு - உட்கொண்டால் கூட அதிகப்படியான கொழுப்பு முற்றிலும் குறைந்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த அளவிற்கு ஓட்ஸ் நமது உடலில் மேஜிக் நடத்திவிடுகிறது.

சோயாபீன்ஸ்:

ஓட்ஸை போன்றே சோயா பீன்ஸும் பல்வேறு இருதயநோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைத்து,நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

பச்சை தேயிலை:

'கிரீன் டீ" எனப்படும் பச்சை தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் கிடைக்கும் பலன்களை சொல்லிமாளாது. பச்சை தேயிலை தேநீர் மகா உசிதம்தான் என்றாலும், சாதா தேயிலை கொண்டு தயாரிக்கப்படும் பால் மற்றும் சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயிலும் பச்சை தேயிலையின் நற்குணங்கள் ஓரளவு அடங்கியுள்ளது. கெட்ட கொழுப்பை குறைப்பது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் உறைதல் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுவது போன்ற அற்புதங்களை இந்த பச்சை தேயிலை நிகழ்த்தி காட்டுகிறது.

மேலும் தேநீரில் 'ஃபோலிக் அசிட்' எனப்படும் உயிர்சத்தான ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. இது இருதய நோய் மற்றும் புற்று நோய் ஆபத்தை குறைக்கிறது.நாளொன்றுக்கு ஒருவருக்கு தேவையான ஃபோலிக் அமில சத்தில் 25 விழுக்காடு, ஒருவர் தினமும் ஐந்து கப் தேநீர் அருந்தினால் கிடைக்குமாம்.

பார்லி( ஜவ்வரிசி):

பார்லி அல்லது ஜவ்வரிசி என்றழைப்படும் இதில் உடல் ஆரோக்கியத்தை பேணும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.குறிப்பாக இருதயத்திற்கு இது மிகவும் நல்லது.கொழுப்பை எதிர்த்து போராடுவதில் ஓட்ஸை விட பார்லி அதிக திறன் வாய்ந்ததாம்.ஓட்ஸைப் போன்றே பார்லியிலும் 'பீட்டா குளூகோன்' என்ற நார்சத்து அடங்கியுள்ளது.மேலும் கல்லீரலுக்கு தேவையான வைட்டமின் 'டி'யும் இதில் உள்ளது.

Saturday, February 26, 2011

மாதுளத்தின் மருத்துவக்குணம்


மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். ஆனால் மாதுளம் பழத்தின் சத்தே அதன் விதைகளில்தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.


பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம். மாதுளம் பழத்தில் அதிகபட்சமாக நீர் சத்து உள்ளது. புரதச்சத்து , நார்ச்சத்து விழுக்காடும், கார்போ ஹைட்ரேட், தாதுக்கள் சுண்ணாம்புச் சத்து மக்னீஷியம் அடங்கியுள்ளன.

மேலும், விற்றமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மாதுளம் பழத்தைப் பொறுத்தவரை பூ, தோல், விதை என அனைத்துமே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை.மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாமாயம் செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பல பிணிகளும் அகலும்.

மாதுளம் பழ ரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும். இதுதவிர, காதடைப்பு, வெப்பக் காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழ ரசம் விலக்கும்.

மாதுளம் பழ ரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகுபதத்தில் காய்ச்சி வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கும்.

Thursday, February 24, 2011

சருமம் பளபளக்க வேண்டுமா?


பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள்.முகம் பளபளக்கும் பப்பாளி பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும் முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.


ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாக்கி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும் கண்கள் பளீச்சாகும்வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிரகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெறும் தர்பூசினி பழச்சாறு, பயற்றமாவு கலந்து முகத்தில் பூசினால் முகம் புதுப்பொலிவு கிடைக்கும். தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும்

இப்படி தினமும் ஒரு 10 நிமிடம் நம் அழகுக்காக செலவு செய்தால் வயதானாலும் இளமையாக இருக்கலாம்

அழகுக்கு அழகு செய்யும் ஒப்பனை


கோல்ட் கிரீம்: 
சருமத்தில் உள்ள அழுக்கை அகற்றி சுத்தப்படுத்துகிறது. கோடை,குளிர் என ஆண்டு முழுவதும் உபயோகப்படுத்தலாம். இது 'ஆல் பர்ப்பஸ்' கிரீம் ஆகும். எந்த வகை சீதோஷணத்திற்கும் உகந்தது.


வானிஷிங் கிரீம்: 
சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைத்து ,சருமத்திற்கு பளபளப்பு ஊட்டுகிறது.நரிஷிங் கிரீம்: சருமத்திற்கு போஷாக்கு அளிக்கிறது.

அஸ்ட்ரிஞ்ஜென்ட் லோஷன்:
சருமத் துவாரங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகிறது.

க்லென்சிங் கிரீம்:
முகத்தில் உள்ள அழுக்கை அகற்றவும், 'மேக் அப்' கலைக்கவும் பயன்படுகிறது.

கொலமின் லோசன்:
சருமத்தில் உள்ள புள்ளிகளை அகற்றி, சருமத்தை மாசு, மருவில்லாமல் வைக்கிறது.

பௌன்டேஷன் கிரீம்:
இது 'மேக் அப்' நல்ல விதமாக அமைய உதவி புரிகிறது. மேலும் புள்ளிகளையும், திட்டுகளையும் நீக்குவதையும் செய்து, சருமத்தையும் மிருதுவாக வைத்துக் கொள்கிறது. கன்னங்களை பளபளப்பு ஆக்குகிறது.

ரூஜ்: 
உதடுகளையும், கன்னங்களையும் சிவப்பேற்ற உதவும் சாதனம். இது திரவ வடிவிலும், கேக்காகவும், கிரீம் மாகவும் கிடைக்கிறது. கண்களோ, அது கருவண்டோ என அதிசயிக்க வைக்க உதவும் சாதனங்கள்.

ஐ ஷடோ: 
கண்களின் வடிவத்தையும், நிறத்தையும் மேம்படுத்திக் காட்டுவதற்காக உபயோகப்படுத்துவது.

மஸ்காரா:
கண் இரப்பை முடிகளை அடர்த்தியாகக் காட்டுவதற்கõகப் பயன்படுத்தப்படுகிறது. மாலை நேர ஒப்பனைக்கு சாலச் சிறந்தது. லிப்ஸ்டிக்: முக ஒப்பனையில் நிறைவுப் பகுதி உதடுகள் தான். பெரிய உதடுகளைச் சிறியதாக்கவும், மிகச் சிறிய உதடுகளைப் பெரியதாகவும் காட்ட உதவுகிறது.

லிப் லைனிங் பென்சில்:
கச்சிதமான உதடுகள் அமைய பெறாதவர்களுக்கு இது ஒரு 'சஞ்சீவி' என்று தான் சொல்ல வேண்டும். உதடுகளைப் பொருத்தமான அளவுக்குத் திருத்தி, பொலிவுறச் செய்வதே இதன் வேலை. அனைத்து ஒப்பனை சாதனங்களும் நல்ல தரமான தயாரிப்புகளாக இருத்தல் அவசியம். அதுதான் சருமத்திற்கு நல்லது. அழகுக்கு அழகு செய்யும் ஒப்பனை!! ....

Wednesday, February 23, 2011

பொட்டு வைப்பதில் பிரச்சினையா?


நம் உடலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் எத்தனை மெனக்கிட்டாலும் சில வேளைகளில் நம்மை அறியாமல் சில ஆபத்தான சாதனங்களை அழகுக்காக பயன் படுத்திக் கொள்கிறோம். கூடவே அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது 'ஓவ்வாமை'. அதனை தவிர்க்க சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.


பொட்டு வைப்பதால் சருமத்தில் பிரச்சினை ஏற்படுமா?

பொட்டு வைப்பதில் பொதுவாக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஆனால் பொட்டுகளை ஒட்ட வைக்கும் பசையின் தரத்தால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு. ரசாயன பொருளால் உருவாக்கப்பட்டிருக்கும் பசை, தொடர்ந்து நெற்றியில் ஒட்டியிருக்கும்போது அந்தப் பகுதி நிறம்மாறி, வடு உருவாகிவிடும்.

உயர்ந்த வகை பவுடர்களை பயன்படுத்தினால் முகத்தில் சரும நிற மாற்றம் ஏற்படுமா?

பவுடர் மூலம் நிரந்தரமான சரும மாற்றம் எதுவும் ஏற்படாது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் பவுடர் பூசாமல் இருப்பது நல்லது. பவுடரில் மணத்திற்காக சில ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவைகள் சிலருடைய உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. ஆனால் வெயில் சருமத்தில் விழுவதைத் தடுக்க சன் ஸ்கிரீன் கிரீம் பூசுவது நல்லது.

எண்ணை தேய்த்துக் குளிப்பது சருமத்திற்கு நல்லதா?

எண்ணை தேய்த்து குளிப்பது என்பது இந்தியாவின் ஒரு பகுதியில் இருக்கும் பாரம்பரிய பழக்கம். அதனால் சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும் என்பது உண்மைதான். வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு இது நல்ல பலனளிக்கும். ஆனால் எண்ணை சருமம் கொண்டவர்களுக்கு மேலும் எண்ணையை தேய்த்து எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. எண்ணையை தேய்த்துவிட்டு சோப்பு போட்டு குளிக்கும்போது சருமத்தில் இருக்கும் எண்ணையும் சேர்ந்து தண்­ணீரோடு போய்விடும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் குளித்த பின்பு, நனைந்த துணியால் சருமத்தில் இருக்கும் தண்­ணீரை ஒற்றி எடுக்கவேண்டும். அதன்பின்பு மிகக் குறைந்த அளவு எண்ணையை எடுத்து, லேசாக சருமத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்பு அதிகமாக எண்ணை பூசிக்கொள்வதைவிட, குளித்த பின்பு சிறிதளவு எண்ணை பூசிக்கொள்வதே சிறந்தது.

தினமும் எத்தனை தடவை குளிக்கவேண்டும்?

எத்தனை தடவை குளிக்கிறோம் என்பதை விட, உடலில் அழுக்கு சேரக்கூடாது என்பதுதான் முக்கியம். மூன்று நேரம் குளித்த பின்பும் உடலில் அழுக்கு நீங்காமலே இருந்தால் எந்த பயனும் இல்லை. வியர்வை, அழுக்கு, வேலை பார்க்கும் அல்லது வசிக்கும் சூழலுக்கு தக்கபடி உடலில் இருக்கும் அழுக்கை போக்கும் விதத்தில் குளிக்கவேண்டும். தினமும் இரண்டு தடவை குளிக்கலாம்.

ஆரோக்கியத்தின் கண்ணாடி சருமம்


அழகாய் இருப்பது அத்தனை பெண்களுக்கும் அவசியம். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்லும் பல பிரபலங்களைப் பாருங்கள் நேர்த்தியான அழகும் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும். 


அறிவையும் அழகையும் தன்னம்பிக்கையையும் ஒன்றாகக் கலந்து காட்டி, செயல்படும் பெண்களே சாதனைக்குரியவர்களாக உருவாகிறார்கள்.

அழகு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது சருமத்தின் நிறம். சிவப்பு நிறம் எல்லா பெண்களும் விரும்பும் நிறமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சருமத்தைப் பற்றி விஞ்ஞானபூர்வமாக எத்தனை சதவீத பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்?

மனித உடலில் இருக்கும் பெரிய உறுப்பு எது? சருமம்தான் உடலில் மிகப்பெரிய உறுப்பு. இஷ்டத்திற்கு நெகிழக்கூடியதும் அதுதான். ஒருவரது சருமம் 24 சதுர அடி சுற்றளவும், நான்கு கிலோவிற்கும் சற்று அதிகமான எடையையும் கொண்டது.

சருமம், உடலை மூடிப் பாதுகாக்கும் போர்வையா? அல்லது ஆபரணமா? இரண்டுமே இல்லை. சருமத்திற்கென்று முக்கியமான வேலைகள் நிறைய இருக்கின்றன. நன்றாக வெயிலடிக்கும் காலத்தில் உடலில் இருக்கும் தண்ணீர்தன்மை வற்றிவிடாமல் பாதுகாக்கும் சருமம், மழைக்காலத்தில் "வாட்டர் புரூப்" போல் செயல்பட்டு உடல் குளிர்ந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது.

சருமத்தில் இரண்டு முக்கிய பகுதிகள். வெளியே தெரிவது "எபிடெர்மிஸ்". உள்புறமாய் அமைந்திருப்பது, டெர்மிஸ். எபிடெர்மிசில் பல அடுக்குகள் உள்ளன. அதன் அடி அடுக்கில் இருக்கும் அடிப்படை செல்கள் நிரந்தரமாக உருவாகி பெருகிக்கொண்டே இருக்கும். புதிய செல்கள் பெருகி மேல் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது மேலே இருப்பவை டெட்செல்களாகி உதிர்ந்து கொண்டிருக்கும். ஒரு செல் புதிதாக புறப்பட்டு வந்து, உதிர்ந்து போக மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். உள்பகுதியில் இருக்கும் டெர்மிசில் பல்வேறு வகையான சுரப்பிகள், ரத்தக்குழாய்கள், மயிர்க்காலின் அடிப்பகுதி போன்றவைகளெல்லாம் இருக்கின்றன.

நுண்ணிய சிறு பகுதி சருமத்தில் மட்டும் ஒரு கோடி செல்கள் இருக்கும். ஒரு பெண்ணின் மொத்த உடல் சருமத்தில் 30 பில்லியன் செல்கள் இருக்கும். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) சருமத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் 50 ஆயிரம் சரும செல்கள் உதிர்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த பரிணாம மாற்றங்களால் ஒருவர் தன் ஆயுளில் 20 கிலோவரையான சருமத்தை உதிர்க்கிறார்.

சருமத்தில் புதிய செல்கள் உருவாகுவதும், பழையவை உதிர்வதும் எல்லா பருவத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 18 வயது பெண்ணுக்கு இந்த பரிணாம மாற்றங்கள் நிகழ இரண்டு வாரங்கள் போதும். அவர் ஐம்பது வயது பெண்மணியாகும்போது அந்த மாற்றங்கள் நிகழ ஐந்து வாரங்கள் வரை தேவைப்படும். வயது கூடும்போது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படும்.

சரும செல்கள் ஒருவகை இறப்பு நிலையை அடையும்போது, அதிலிருந்து கெரோட்டின் உருவாகிறது. இந்த கெரோட்டின்தான் நகம் மற்றும் முடியின் அடிப்படை. வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் தலை முடி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருக்கும். ஒரு மாதம் அது 1.25 செ.மீ. வளரும். தொடர்ந்து இப்படியே வளர்ந்து கொண்டிருக்காது. ஐந்து ஆறு மாதங்கள் கழித்து சிறிது காலம் ஓய்வெடுக்கும். சுழற்சி அடிப்படையில் பத்து சதவீத முடி ஓய்வெடுக்கும்போது 90 சதவீதம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும். ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும் முடிகளே குளிக்கும் போது உதிர்கின்றன. (அதனால் முடி உதிர்வதை நினைத்து ரொம்ப கவலைப்படாதீங்க)

முடி, கண்களின் கருவிழி, சருமம் போன்றவைகளுக்கு நிறம் தருவது மெலானின் என்ற ரசாயன பொருள். சூரிய கதிர்கள் சருமத்தை கடுமையாகத் தாக்கும்போது அது சருமத்தை பாதிக்காமலிருக்க மெலானின் உதவுகிறது. தொடர்ச்சியாக சருமத்தின் ஒரு பகுதியின் கடுமையான சூரிய கதிர்கள் பட்டால் அந்த பகுதியில் மெலானின் அதிகமாக உற்பத்தியாகி சருமம் கறுத்துப் போய்விடும்.

சருமத்தின் மென்மையும், நிறமும், சுருக்கமற்ற மினுமினுப்பும் ஆரோக்கியம் மற்றும் அழகின் வெளிப்பாடாக இருக்கிறது. வெளிநாட்டினரைப் போல் வெள்ளை நிறமாக சருமம் இருக்கவேண்டும் என்று அத்தனை பெண்களும் விரும்புகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அந்த நிறம் பல்வேறு துறைகளில் வெற்றிபெற படிக்கட்டு என்று நினைக்கும் பெண்களும் ஏராளம். ஆனால் வெள்ளை நிற சருமம் ஒரு சில நோய்களை வரவேற்பதாக இருக்கிறது. சருமம் வெள்ளையாக இருக்கும் வெளிநாட்டினருக்கு நம் நாட்டைவிட சரும புற்று நோய் அதிகம் வருகிறது. இந்த தொந்தரவிலிருந்து விடுபட தங்கள் சருமம் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லையே என்று வெளிநாட்டு பெண்கள் ஏங்குகிறார்கள். அதற்காகத்தான் கடற்கரை பகுதியில் படுத்து "சன் பாத்" எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகம் கறுக்காமலும், அதிகம் சிவக்காமலும் இருக்கும் சருமமே ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் ஏற்றதாக இருக்கிறது.

முகத்தை மனதின் கண்ணாடி என்று சொல்வார்கள். அதுபோல் சருமத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். உடலில் நோய்கள் இருந்தால் அது சருமத்தில் பிரதிபலிக்கிறது. சருமத்தின் நிறத்தை சிவப்பாக மாற்ற முடியுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

மெலானின் மற்றும் சில வர்ண கட்டமைப்புகளும் சேர்ந்து சருமத்திற்கு நிறம் கொடுக்கிறது. வாழ்க்கை சூழலும், சுற்றுச்சூழலும் இதற்கு ஒருவகை காரணம். குளிர்ச்சி அதிகமுள்ள நாடுகளில் நம் நாட்டு பெண்கள் சில வருடங்கள் வசித்தால் அவர்கள் சரும நிறமும் ஓரளவு கலராக மாறும். அதிக வெயிலடிக்கும் கால நிலையிலும், மாசு நிறைந்த சுற்றுப்புறத்திலும் வசித்தால் நிறம் கறுக்கவும் செய்யும்.

சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தினமும் இருமுறை குளித்தல், உடற்பயிற்சி செய்தல், உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்தல், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் சருமம் மினுமினுப்பாக இருக்கும். பெண்களின் சரும நிறத்தில் பாரம்பரிய பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. சருமத்தின் நிறத்தில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. என்றாலும் நவீன அழகுக்கலை பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் வீட்டிலே செய்யும் குறிப்பிட்ட பராமரிப்பு முறைகள் மூலம் நிறத்தை குறிப்பிட்ட அளவுவரை மேம்படுத்தலாம்.

தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவைகளை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மாறும் என்பது சரியா?

குறிப்பிட்டுச் சொன்னால் இதனால் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. இயற்கையான நிறத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. நன்றாக பராமரித்து, வெயிலில் செல்லாமல் இருந்தாலே சருமத்தின் நிறம் ஓரளவு மேம்படத் தொடங்கிவிடும். தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவை ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக செயல்படுகிறது. ஓரளவு நிறத்தை தரும் சக்தி இதற்கு இருக்கிறது. சிவப்பு நிறமான சருமத்தைக் கொண்டவர்களின் வாழ்க்கைமுறை முரண்பாடாக இருந்தால் அவர்கள் சருமத்தின் நிறமும் மாறிக்கொண்டிருக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாதவரை சரும நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. அழகான சருமத்தைப் பெற இன்னும் ஆலோசனைகள் உண்டு.

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க


பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்கலின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். 


ஒரு வெள்ளரித்துண்டு அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.

பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும்.இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

முடி ஏன் உதிர்கிறது?


முடி கொட்டுவது என்பது நாம் எண்ணுவதை விட மிகச் சாதாரணமானது. பல நேரங்களில் அது தற்காலிகமானதாகவும், சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கலாம்.


தலை வாரும்போது முடி கொத்தாகக் கையோடு வருகிறதா? வாஷ்பேஸின் முழுக்க முடியாக இருக்கிறதா? நேற்று வரை உங்கள் தோற்றப் பொலிவிற்கு உதவிய உங்கள் கேசம் இன்று கலகலத்துத் தட்டையாக தோற்றமளிக்கிறதா? பதட்டப்படாதீர்கள். முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.

வேதனைப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றால் இதோ ஒரு ஆறுதல். கொட்டுகின்ற முடிகளில் ஒன்றிரண்டை எடுத்து முடியின் வேர்ப்பகுதியை உற்று நோக்குங்கள். மிக மெலிதான நுண்ணிய வெள்ளை உருண்டை ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள். அவ்வாறு ஒரு சிறிய வெள்ளை உருண்டை இருந்தால் உங்கள் முடி இயல்பாகவே இருக்கிறது. அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவ்வாறு இல்லாமல் போனாலோ அல்லது முடி இழப்பு மட்டுக்கு மீறி இருப்பதுடன் அது தொடர்ந்தாலோ நீங்கள் சரும நோயியலார் அல்லது முடியியலார் ஒருவரைக் கண்டு ஆலோசனை பெறுவது நல்லது.

இன்றைக்கு முடி கொட்டுவதைத்தடை செய்யக்கூடிய ஒரே மருந்து ரோகெய்ன் தான். இது வெளி நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு மாத காலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய அளவு ரோகெய்ன் மருந்தின் விலை சுமார் ரூ. 5000/ ஆகலாம். முடியியல் துறையினர் உணவில் கவனம் செலுத்தச் சொல்வதுடன் ஓய்வு, அமைதி, உற்சாகம் போன்ற மனநிலை தொடர்புடைய செய்கைகளின் பயனையும் மிதமான உடற்பயிற்சியின் தேவை பற்றியும் குறிப்பிடுவார்கள்.

பல நேரங்களில் கீழ்க்கண்ட ஏதாவதொரு காரணத்தாலும் முடி கொட்டக் கூடும். ஆனால் இது தற்காலிகமானது தான். முயன்றால் தவிர்த்துவிட முடியும்.

இறுக்கமும், இழுவையும்:

முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. எனவே போனிடெயில் போடுகிறவர்களும், இழுத்துப் பின்னலிடுகின்றவர்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு:

உடலில் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கின்ற போது முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் முளைக்கும். கருவுற்றிருக்கும் காலத்தில் முடி கொட்டாமலிருப்பதற்கு இந்த ஹார்மோன் அளவு உயர்ந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த பின்னர் முடி கொட்டுவதற்குக் குறைந்து விட்ட ஹார்மோன் காரணமாகிறது. ஆனால் இது ஐந்தாறு மாதங்களிலோ அல்லது ஓராண்டிலோ சரியாகலாம். அதே போன்று நடுவயதுப் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்புக் குறைவதால் முடி எளிதாகக் கொட்டுவதுடன் அடர்த்தியும் குறைந்து விடுகிறது.

சோகை / காய்ச்சல்கள் / கருத்தடை மருந்துகள்:

உடலில் இரத்தம் குறைவாக இருந்து சோகை நோய் காணப்பட்டாலோ, அல்லது டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்களில் அடிபட்டு மீண்டிருந்தாலோ அன்றி வாய்வழி மற்றும் ஊசிவழிக் கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்தி இருந்தாலோ முடி கொட்டுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு, மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதானலாவது முடி கொட்டுகிறது என்று நீங்கள் சந்தேகப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுங்கள்.

உணவு:

முடியின் வளர்ச்சியில் உணவின் பங்கு கணிசமாகவே உள்ளது. பெண்கள் தங்கள் உணவு முறைகளை அடிக்கடி மாற்றுவதனாலும், அளவுக்குக் குறைவாக உண்பதாலும் உணவில் ஊட்டச் சத்துக்கள் விட்டமின்கள் குறைவாக இருப்பதாலும் முடி கொட்டக் கூடும்.

முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகள்:

1. தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.

2. நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும், முடிக்கு தேவையான வைட்டமின் "சி" சத்துக்களையும் அளிக்கும்.

3. தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

4. சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல் அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும். மேற்கூறியவற்றுள் வசதிக்கேற்ப ஒன்றிரண்டு முறைகளை கையாளலாம்.