Saturday, September 24, 2011

பெண்களுக்கான ஆரோக்கியம் – Ladies Health

பெண்களுக்கான ஆரோக்கியம் – Ladies Health

 

[மேலே]

 

 

அறிமுகம்

மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா... பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிருவாக. அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்...நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணி சாப்பிட்டா... எல்லாப் பிரச்சினையும் பஞ்சா பறந்துடும்.

[மேலே]

வெள்ளைப்படுதல்

 

ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும்.

ஆனை நெருஞ்சில்கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்படியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணு நாள் குடீச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது.

 

மணத்தக்காளிவேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.

அத்திக்காய்அத்திக்காயை துவரை.. இல்லைன்னா பாசிப்பருப்போட சேர்த்து கூட்டு செஞ்சி சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல் சீக்கிரமே குணமாயிரும்.

[மேலே]

 

 

தாமதமான மாதவிடாய்

 

சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு சாப்பிடணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க... ஒழுங்கா மாதவிடாய் வரும்.

மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து தான். அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

சதக்குப்பை - Indian Dill seed

சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும்.

 

 

கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

[மேலே]

 

மாதக்கணக்கில் மாதவிடாய் பிரச்னை

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

 

கல்யாணமுருங்கை

கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.

 

Ladies

[மேலே]

 

பெரும்பாடு பிரச்சினை

Sad Lady

மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால அவதிப்படுறவுக நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா... பெரும்பாடு தீரும்.

 

வாழைப்பூ

 

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து, இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா.... மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.

 

கடுக்காய்

 

கடுக்காய் பத்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்கவைக்கணும். அது 25 மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல்

அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து, 100 மில்லி தண்ணியில போடடு கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாதவிடாய் நேரத்துல வர்ற வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.

தும்பை

தும்பை இலை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள் சாப்பிட்டா பெரும்பாடு பிரச்சினை சரியாயிரும்.

இலந்தைஇலை, மாதுளை இலை ரெண்டும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

 

நெல்லி வற்றல், படிகாரம், கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே பெரும்பாடு சரியாகும்.

 

[மேலே]

 

 

குழந்தை அழகாக பிறக்க

Baby

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

 

Pregnant Lady

 

கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

[மேலே]

 

 

முக சுருக்கம்

Face Skin

தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

 

தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

[மேலே]

 

 

பித்தவெடிப்பு

Foot crack

 

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

[மேலே]

 

நன்றி.

ஆரோக்கிய குறிப்புகள் – Health Tips

ஆரோக்கிய குறிப்புகள் – Health Tips

Tips

 

பல் வலி

Thulasi

பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

 

உட‌ல் வ‌லிமை

Honey

காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

 

வயிற்றுப் போக்கு

Gouva

வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

 

பித்தவெடிப்பு மறைய

Sunnampu

தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

 

தொண்டை வலி

எலுமிச்சை

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

 

இருமல் தொல்லை

Salt

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

Honey

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

தூதுவளை

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

வெற்றிலை

கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

சித்தரைத்தை

சித்தரத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

 

கட்டிகள் உடைய

மஞ்சள்

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

 

தும்மல் வராமல் இருக்க

மிளகு பொடி

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

 

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

வாழைபழத்தோல

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

 

பேன் தொல்லை

வசம்பு

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

 

மேனி பளபளப்பு

Orange

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

 

கரும்புள்ளிஎலுமிச்சை

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

Thulasi

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

 

தொண்டை கரகரப்பு

அதிமதுர

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

 

கருத்தரிக்க

திராட்சை

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

 

நன்றி.

Monday, September 19, 2011

ஸ்கிப்பிங் – Skipping Rope - கயிறு தாண்டுதல்




கயிறு தாண்டுதல் - ஸ்கிப்பிங் – Skipping Rope



அறிமுகம்

ஒரு உடற்பயிற்சி உங்களது உடம்பை கட்டுகோப்பாகவும், அதே நேரத்தில் நீங்கள் அதை விரும்பி செய்ய முடியும் என்றால் அதில் ஸ்கிப்பிங்கும் ஒன்று.

ஸ்கிப்பிங் என்றால் பொதுவாக நாம் குழந்தை பருவத்தில் விளையாட்டு மைதானத்தில் விளையாடியது தான் நினைவுக்கு வரும். இது மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை பயிற்சிக்கு தொடர்புடையதாகவும்  உள்ளது.
இது நமக்கு செலவு வைக்காத, எங்கும் எந்நேரத்திலும், நம் விருப்பப்படி தனித்தோ நம் குழந்தைகளோடோ, உறவினர் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து செய்ய கூடிய பயிற்சி.
குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய முடியவில்லையே என்று வருத்தம் வேண்டாம். அவர்களோடு எண்ணி, பாடிக் கொண்டே ஸ்கிப்பிங் செய்வதும் படுத்துக் கொண்டு முட்டியில் அவர்களை வைத்து முட்டியை மடக்கி மடக்கி தூக்கி விளையாடுவது அவரகளுக்கு ரொம்பவும் பிடிக்கும், உடம்பும் மெலியும்.

உங்களால் ஓட்டப்பயிற்சி செய்ய முடியாவிட்டால், தொடர்ந்து அரை மணி நேரம் படியேறி இறங்குதல் அல்லது ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளலாம்.

"ஸ்கிப்பிங்' செய்யும் போது, காலுக்குப் பொருந்தாத ஷூ அணிந்தால், உங்கள் முட்டியை பதம் பார்த்து விடும். வீட்டிலேயே ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். முதல் இரண்டு நாள் செய்வதற்குத் தயக்கமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

காலை வேளை‌யி‌ல் வெறு‌‌ம் வ‌யி‌ற்றுட‌ன் உ‌ள்ள போது ‌சி‌றிது நேர‌ம் ‌ஸ்‌கி‌ப்‌பி‌ங் என‌ப்படு‌ம் க‌யிறுதா‌ண்டு‌ம் உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்த‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. இது நிச்சயமாக பெரிதும் உடல் எடை குறைவர்தற்க்கும் உதவி செய்யும்.

நீளம் தேர்வு செய்ய

கயிற்றை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கயிற்றில் சரியான நீளம் தேர்வு செய்ய, நீங்கள் கயிற்றில் மத்தியில் கால்களை வைக்க வேண்டும் மற்றும் அக்குள் வரை இரு முனைகளும் உயர்த்த வேண்டும்.



வகைகள்

சாதாரண தாண்டல் ( Basic Jump )


கயிறு கீழே வரும் பொழுது ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும் தூக்கி குதிப்பது.

மாற்று தாண்டுதல் ( Alternate Jump )
கயிறு கீழே வரும் போது ஒரு காலால் மாற்றி மாற்றி தாண்ட வேண்டும்.


பின்னி தாண்டல் ( Criss Cross )
இது சாதாரண தாண்டுதல் போன்று தான் ஆனால் இடது மற்றும் வலது கைகளை குறுக்காக பின்னி மாற்றி மாற்றி குதித்து தாண்ட வேண்டும்.


ஓர சுற்றல் ( Side Swing )
கயிரை இடது மற்றும் வலது பக்க வாட்டில் மாற்றி மாற்றி சுற்றியவாறு இரு கால்களையும் தூக்கி குதிக்க வேண்டும்.


முன்-பின் பின்னி தாண்டுதல் ( Front-back cross )
இது பின்னி தாண்டுதல் போன்றுதான், ஆனால் ஒரு கையை பின்னால் குறுக்காக வைக்க வேண்டும்.


இருமுறை தாண்டல் ( Double Under )
இதற்க்கு நீங்கள் இன்னும் சற்று உயரமாக குதித்து கயிரை இரு முறை சுற்ற வேண்டும்.மூன்று முறை சுற்றி குதிப்பவர்களும் இருக்கிறார்கள்.


பல பேர் தாண்டல் ( Combination Jump )
ஒரே கயிற்றில் இருவர் விளையாடலாம். மேற்கூறியபடி இரண்டு கால்களால்  கயிற்றைத் தாண்ட வேண்டும். அதே போல் இருவரும் ஒரே நேரத்தில் குதிக்க வேண்டும் , கயிற்றைத் தாண்ட வேண்டும். போடப்படும் கயிறு இரண்டாமவரையும் சேர்த்து சுற்றி வர வேண்டும். அதனால் இது விளையாடும் போது கயிற்றைப் பிடித்து இருப்பவர்  உயரமாகவும், மற்றவர் குள்ளமாக இருந்தால் நன்றாக் விளையாடலாம். இதுவே மாறி இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.
கயிற்றின் இரு முனைகளை ஆளுக்கொரு முனையாக நீளவாக்கில் பிடித்துக் கொள்ள வேண்டும். இதில் 4 பேர் விளையாடலாம். ஆளுக்கு ஒரு நிறம். சிவப்பு,
மஞ்சள், நீலம்,பச்சை. யார் கயிற்றைப் பிடிக்க  வேண்டும். யார் முதலில்  கயிற்றில் குதிக்க வேண்டும் என்பதை "சாட் பூட் த்ரீ" போட்டு முடிவு செய்யலாம்.

இருவர் கயிற்றை நீளவாக்கில் பிடித்துக்கொண்டு, "Red Blue Green Yellow" என்று  கூறியபடியே கயிற்றைச் சுற்ற வேண்டும். கயிற்றைத் தாண்டுபவர் கயிற்றில் கால் படாமல் குதிக்க வேண்டும். கயிற்றில் கால் பட்டு  அவர் நின்று விட்டால் கடைசியாக என்ன நிறம் கூறப்பட்டதோ, அந்த நிறத்துக்குரியர் குதிக்கலாம். பெண்கள் தான் அதிகம் இந்த விளையாட்டை விளையாடுவார்கள். நேரம் போவதே தெரியாது.

இன்னும் நிறைய Toad, Scissors, Skier, Bell, போன்ற வகைகளும் இருக்கு.

கயிறு தாண்டுதலுக்கு தேவையான கயிறு பெறுவது ரொம்ப எளிது. துணி காயப் போடுற கயிறு இருந்தாலே போதும். உங்க உயரம் மற்றும் தேவைக்கேற்ப வெட்டிக்  கொள்ளலாம். (அம்மா திட்டினா, எனக்குத் தெரியாதுபா....)

பலன்கள்

  • ஒரு மணி நேர கயிறு தாண்டுதல் 1300 கலோரியை எரித்து விடும்.
  • எடை இழக்க உதவுகிறது
  • எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது
  • ஸ்கிப்பிங் தசைகள், இதயம் மற்றும் நுரையீரல் உறுதிபட அற்புதமான வேலை கொடுக்கிறது.
  • 2 முதல் 5 நிமிடங்கள் வரை கயிறு தாண்டுதல் போன்ற பயிர்ச்சி செய்தால் எலும்பு தேய்மானத்தை தவிர்க்கர்லாம்.
  • மூளைக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்.
  • உடலின் நிலைத்தன்மையை அதிகரிக்கும்.
  • உங்களிடம் ஒருங்கிணைப்பு, மூச்சி பயிற்சி, சுவாச சக்தி மற்றும் திறன், சமநிலை, கால்கள் மற்றும் கைகளின் வேகம், சுறுசுறுப்பு மற்றும் உற்சாகத்தையும் உருவாக்கும்.


குறிப்பு:
மிக அதிக உயரத்தோடு கயிறு தாண்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது கால் மூட்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதய நோயாளிகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி கயிறு தாண்டுதலில் ஈடுபடலாம்.

 
நன்றி.