Thursday, March 29, 2012

அல்சரை போக்க பச்சை வாழைப்பழம்


வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.


எக்ஸாம் வரப்போகிறது


"எக்ஸாம் வரப்போகிறது... இன்னும் பொறுப்பில்லாமல் இருக்கிறியே... படிக்கவே மாட்டேங்கிற... என்னத்த மார்க் வாங்கப் போறியோ?" என்று குழந்தைகளை, திட்டித் தீர்ப்பவரா நீங்கள்? குழந்தை படிக்க வேண்டும் என்பதில் நீங்கள் காட்டும் அக்கறை சரிதான். ஆனால், உங்கள் குழந்தையின் தேர்வுக்கு அவர்கள் மட்டுமல்ல, நீங்களும் கொஞ்சம் தயாராக வேண்டும். நீங்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன?


நெருங்கிய உறவினர்களிடம் உங்கள் குழந்தையின் தேர்வு தேதிகளை தெரிவியுங்கள். அப்படி கூறுவதால், உறவினர்கள் குழந்தைகளின் தேர்வு சமயத்தில் உங்கள் வீட்டிற்கு வருவதை தவிர்க்கலாம். அப்படியே வந்து விட்டால், நாசூக்காக எடுத்துச் சொல்லி விடுங்கள்.

அக்கம் பக்கத்து வீட்டினர், நண்பர்கள் போன்றோர், உங்கள் வீட்டிற்கு அரட்டை அடிக்க வந்தால், அவர்களையும் நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள்.

சில பெற்றோர், பிள்ளைகளை மட்டும் படிக்கச் சொல்லிவிட்டு, தாங்கள், 'டிவி' பார்ப்பர். நீங்கள் 'டிவி' பார்ப்பதை முதலில் நிறுத்துங்கள். குழந்தைகள் வேறு அறையில் உட்கார்ந்து படித்தாலும், அவர்கள் கவனம் முழுவதும் 'டிவி'யில் ஓடும் நிகழ்ச்சிகளில் தான் இருக்கும்.

நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால், உங்கள் குழந்தையின் தேர்வு நேரத்தில், லீவு போட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதும், டியூஷன், ஸ்கூல் என்று விட்டுவிட்டு, உங்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிடாதீர்கள்.

குழந்தைகளின் தேர்வு சமயத்தில், பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, "நன்றாகப் படித்திருக்கிறாய். நிச்சயமாக நிறைய மார்க் வாங்குவாய்" என்று ஊக்கமளியுங்கள். அப்படி இல்லாமல், "நீ படிச்ச படிப்புக்கு கோழி முட்டை தான் வாங்குவே... தேர்வு முடிவு வரட்டும், அப்பறம் உனக்கு வச்சுக்கிறேன்.." என்று எதிர்மறையாக கூறினால், அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவர். மேலும் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு ஓரளவு படித்ததையும் மறந்து போய்விடுவர்.

பொதுவாக உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் எப்போதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஒரே வீட்டில் மற்ற குழந்தைகள் இருந்தாலும் அவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். (குறிப்பா என் மூத்த மகளை விட இளைய மகள் ரொம்ப புத்திசாலி இப்படியான பேச்சுகள்) தேர்வு நேரத்தில் அடுத்த வீட்டு குழந்தையை ஒப்பிட்டு, "அவனும் உன்ன மாதிரி தானே... அவன் மார்க் வாங்கலே? நீ தண்டம்... படிச்சாத்தானே? எப்பவும் 'டிவி' முன்னாடியே உக்காந்திட்டிருந்துட்டு கடைசி நேரத்துல முட்டி மோதினா, படிப்பு எங்கே வரும்" என்று 'அர்ச்சனை' செய்யாதீர்கள்.

சமையல் தவிர, இதர வேலைகளை குறைத்துக் கொண்டு, குழந்தைகள் படிப்பிற்கு துணை செய்யலாம். அல்லது அவர்கள் அருகில் அமர்ந்தவாறு நீங்களும் ஏதாவது புத்தகத்தை படித்து, நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தலாம். இது மனரீதியாக, நேர்மறையான விளைவை உங்கள் குழந்தையிடம் ஏற்படுத்தும்.

தைரா‌ய்டு குறைபாடு இரு‌ந்தா‌ல்


குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல நோ‌ய்களை சரி செய்து விடலாம்.


குழ‌ந்தை ‌பிற‌ந்த 3 நா‌ட்களு‌க்கு‌ள் ர‌த்த‌ப் ப‌ரிசோதனை செ‌ய்து, குழ‌ந்தை ‌பிற‌‌க்கு‌ம் போது அத‌ற்கு தைரா‌ய்டு எ‌வ்வாறு உ‌ள்ளது எ‌ன்பதை சோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம். ‌பிறகு தைரா‌ய்டு குறைபா‌ட்டா‌ல், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

தைரா‌ய்டு குறைபாடு இரு‌ந்தா‌ல் இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

எ‌ன்சை‌ம் குறைபாடு இரு‌ப்‌பி‌ன், குழ‌ந்தைகளு‌க்கு க‌ண்புரை, மனவ‌ள‌ர்‌ச்‌சி குறைபாடு போ‌ன்றவை ஏ‌ற்படலா‌ம். இ‌வ்வாறு இரு‌ப்‌பி‌ன் குழ‌ந்தை‌க்கு உ‌ரிய ஊ‌ட்ட‌ச்ச‌த்து உணவு கொடு‌த்து கா‌ப்பா‌ற்ற முடியு‌ம்.

இ‌ந்த ர‌த்த‌ப் ப‌ரிசோதனையை பல மரு‌த்துவமனைக‌ள் க‌ட்டாயமா‌க்‌கியு‌ள்ளன. அ‌வ்வாறு இ‌ல்லாம‌ல் இரு‌ப்‌பி‌ன் பெ‌ற்றோ‌ர் இதனை செ‌ய்ய வ‌லியுறு‌த்தலா‌ம். குழ‌ந்தை ‌பிற‌ந்த மூ‌ன்று ‌தின‌ங்களு‌க்கு‌ள் அத‌ன் கு‌திகா‌லி‌ல் இரு‌ந்து ‌சிறு து‌ளி ர‌த்த‌த்தை எடு‌த்து இ‌ந்த ப‌ரிசோதனை செ‌ய்ய‌ப்படு‌ம்.

இதனை செ‌ய்வதா‌ல் வரு‌ங்கால‌‌த்‌தி‌ல் வரு‌ம் ‌வியா‌தியை த‌ற்போது குண‌ப்படு‌த்தலா‌ம். இ‌ந்த ந‌ல்ல வா‌ய்‌ப்‌பினை பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது பெ‌ற்றோ‌ரி‌ன் கடமையாகு‌ம்

ரத்த அழுத்தத்தை சீராக


நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,

‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.

கோடையில் குளு குளு


கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது. வெள்ளரிக்காயை மிக்சியில் அடித்து சிறிது பால் ஏடு சேர்த்து தடவிக் கொள்ளலாம்.

உருளைக் கிழங்கை எடுத்து மிக்சியில் அறைத்து பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டு கழுவலாம். உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் ஏஜெண்டாகவும் செயல்படுகிறது.

வெயில் பட்டு முகம் கறுத்துப் போய் விட்டதாக உணர்பவர்கள் இந்த உருளைக்கிழங்கு பேக்கை முகத்தில் போட நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த சீசனில் பழங்கள் எளிதாகக் கிடைக்கும்.

கோடையின் கடுமையைப் போக்குவதில் முதலிடம் வகிப்பவை வாழைப்பழம் மற்றும் தர்பூசணி பழங்கள். இவற்றைக் கொண்டு பேஸ்பேக்குகள் தயாரிக்கலாம்.

வாழைப்பழத்தை மசித்து அரை ஸ்பூன் பால் சேர்த்து சில துளிகள் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விட்டப்பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். தர்பூசணி பழத்தைக் கொண்டும் பேஸ் பேக் தயாரிக்கலாம்.

தர்பூசணி பழத்துடன் பால் சிறிதுதேன் சேர்த்து முகத்தில் தடவிக் கொண்டு 20 நிமிடங்கள் உலரவிட்டு முகத்தைக் கழுவலாம். இந்த தர்பூசணி மற்றும் வாழைப்பழ பேக்குகளை வீட்டிலேயே தயாரிப்பது எளிது.

அவ்வப்போது பிரஷ்ஷாகத் தயாரித்து பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும். இந்த வகை பேஸ்பேக்குகள் ஓரளவு கோடையின் கடுமையைப் போக்கக் கூடியவை.

நாள் முழுவதும் வெயிலில் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு முகம் கன்றிக் கறுத்து விடுவது இயற்கை. இவர்கள் பன்னீரை பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றிக்கொள்வதன் மூலம் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.

கோடை வெயிலில் போய் விட்டு வந்த பின் கண்கள் உஷ்ணத்தால் எரிகிறதல்லவா? வெள்ளரிக்காயை சிலைஸாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி எடுக்க கண் எரிச்சல் நீங்கும்.

இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்து கொள்வதன் மூலமாகவும் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

இள நரையைப் போக்க வேண்டுமா


இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.


முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும்.


இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும். சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம்.

முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில். கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும். இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

Wednesday, March 28, 2012

ஆரோக்கியமான வாழ்வுக்கு

ஆரோக்கியமான வாழ்வுக்கு.................

1. ஒல்லியான உடம்பு உறுதியான உடம்பு.


2. கொழுப்பு மண்டி உடல் பெருத்தால் குந்தி எழுந்தால் கூட கூப்பாடு போடணும்.

3. அன்றே கொல்வது காட்டுப்புலி. நின்று கொல்வது வீட்டுப் புளி.

4. அளவான உறக்கம் வளமான வாழ்வு

5. உழைக்காத உடம்பு உழுத்துப்போன உலக்கை.

6. மூன்று வேளை உள்ளே. மூன்று வேளை வெளியே.

7. சாப்பிடும்போது தண்ணீரைத் தடை செய்.

8. உண்ணா நோன்பு உயிர் வாழும் நோன்பு

9. உடற்பயிற்சி உடம்புக்கான கவசம்.

10. வெயிலை மறந்தால் வாழ்வெல்லாம் துயரே.

11. சனி நீராடு

12.வெள்ளைச் சீனி வெள்ளை நிற நஞ்சு

13. இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு.

14. பசியோடு அமர்ந்து பசியோடு எழு.

15. நீரை அருந்து. உணவைக் குடி.

16. உண்ணும் உணவே மருந்து.

17. முப்போதும் மோர் குடி.

18. ஆண் பெண் உறவு முறிந்தால் உறவும் திரிஞ்சு போகும்.

19. கலவி நுணுக்கம் வாழ்க்கையின் பேரின்பம்

20. உட்காரும் இடத்தில் உறங்கி எழு.

Sunday, March 25, 2012

வயிறு மற்றும் உடல் எடை குறைய வழி


 வயிறு மற்றும் உடல் எடை குறைய வழிமுறைகள் ........

udal edai kuraika
உடல் எடை குறைக்க

1.இருதயத்தை வேகமாக இயங்க செய்யும் பயிற்சி
2. அதிகாலையில் மூச்சு பயிற்சி
3.திட்டமிட்ட சரிவிகித உணவு
4.நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
5. சர்க்கரையை தவிர்க்க வேண்டும்
6. ஒரு நாளைக்கு குறைந்த  அளவிலான சாப்பாடு 6 அல்லது 7  முறை   சாப்பிட வேண்டும்
7. கூட்டு  கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்
8. நல்ல கொழுப்புகள் இருக்கும்  உணவை சாப்பிட வேண்டும்
9. புரோட்டீன் நிறைந்த  காய்கறிகள்  மற்றும் இறைச்சி சாப்பிட வேண்டும்
10. சரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்
11. நார்சத்து அதிகம் உள்ள பழங்களை  சாப்பிட வேண்டும்
12. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும்
13. உடல்பயிற்சி  செய்ய வேண்டும்
14. வருத்த மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது
15. நாளைக்கு ஒரு முறையாவது  கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும.
16. அதிகாலையில் சுடு தண்ணீரும், பகலில் குளிர்ந்த தண்ணீரும் குடிக்க வேண்டும்
17. உப்பை குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
18. தேங்காய், கடலை,பாமாயில் போன்ற எண்ணையில் செய்த உணவை சாப்பிட கூடாது

Saturday, March 10, 2012

தைராய்டு பற்றிய தகவல்கள்


தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?

கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான்.
இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?

நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் டாக்டர்? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.

1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.
2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.

ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.

உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு?

பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.

தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?

குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.

1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது, 2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து, 3. அறுவை சிகிச்சை. தைராய்டு அதிகமாக சுரக்கின்ற நோயாளிக்கு மருந்து மாத்திரையே நிரந்தரமான தீர்வாக அமையாது. 6 முதல் 12 மாதம் வரை மருந்து சாப்பிட்டு பார்த்து குணமாகவில்லை என்றால் அணுத்தன்மை உள்ள சொட்டு மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தி விடலாம்.

அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்?

இன்று வேகமாக வளர்ந்து வரும் அணுக்கதிர் மருத்துவத்தில் இத்தகைய தைராய்டு பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுக்கதிர் மருந்து உபயோகிக்கப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்தை நோயாளிக்கு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ செலுத்தப்படும். உடலில் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்றுநோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டு இந்தியா முழுதும் அனுப்பப் படுகிறது. கழுத்தில் ஏதேனும் கட்டி இருந்தால் குழந்தைகள் படிப்பிலும், வளர்ச்சியிலும் மந்தமாக காணப் பட்டால், சுரப்பிகளில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

இந்த அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சையினை பெற்ற நோயாளி அன்றைக்கே வீட்டுக்குப் போய்விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டாம். ரத்த இழப்பும் இருக்காது. நோகாமல் தைராய்டு நோயை அகற்றுகின்ற அற்புதமான அதிநவீன மருத்துவம் இது.

சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?

பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.

படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.

தைராய்டில் புற்றுநோய் வருமா?

தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.

1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

தைய்ராய்டு அளவு.
(Thyroid Stimulating Hormone)
TSH: less than 0.50 TSH: 0.50-1.4 TSH: 1.5-2.4 TSH 2.5-3.5 TSH: 3.6 and higher

பெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆபரேஷனுக்குப் பிறகு அணுக்கதிர் சொட்டு மருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்.

கீரைகளின் பயன்கள்

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.


இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.


பொன்னாங்கண்ணி கீரை: இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் கண்களில் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக காட்சிதரும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மூல நோயிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.



பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.

இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.

பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.

இள‌ம் பெ‌ண்க‌ள் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு இர‌த்த சோகை உ‌ள்ளது. இதனா‌ல் குழ‌ந்தை‌ப் பேறு காலக‌ட்ட‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க பே‌ரி‌ச்ச‌ம் பழ‌த்தை உ‌ட்கொ‌ள்ளு‌ங்க‌ள் இர‌த்த சோகையை‌ப் போ‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌தி செ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது

கொசுத்தொல்லை


இப்போது குளிர்காலம் என்றாலும் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. பெரியவர்களை விட சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சின்ன கொசுதான் என்றாலும், அதனால் பெரிய பெரிய நோய்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இந்த கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?

* கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கையை சுற்றிலும், கொசு வலை கட்டுவதோடு, ஜன்னல் களிலும் வலை பொருத்தலாம்.

* கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

* தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் வசிக்கும் பகுதியில் கொசுக்கள் அதிகளவில் காணப்பட்டால், வாசனையற்ற கொசுவர்த்திகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த வாசனை, அலர்ஜியை ஏற்படுத்தி விடலாம். அதனால் தரமான-பாதுகாப்பான கொசுவர்த்தியை தேர்வு செய்யுங்கள்.

* டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்திலும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத்திலும் கடிக்கும். அதனால், இந்த நேரங்களில் கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியம். குறிப்பாக, இந்த நேரங்களில் மேற்படி கொசுக்கள் குழந்தைகளை கடிக்காமல் பாதுகாப்பது முக்கியம்.

Wednesday, March 7, 2012

குறட்டை வராமல் தடுக்க

குறட்டை விடுவதால் பக்கத்தில் உறங்குபவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதுடன், அவர்கள் மீது கடும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.
குறட்டையை குறைக்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன, இதனை தடுப்பதற்கு சில கருவிகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன.

மேலும் ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.

ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:

குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். எல்.ஏ.யு.பி என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.

அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.

முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்து கொள்ளலாம்.

அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது. இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது.

Tuesday, March 6, 2012

சித்த மருத்துவம் - இஞ்சி

ஐயாயிரம் வருட பழமையான நம் சித்த மருத்துவம்.
காலையில் இஞ்சி ,

கடும்பகல் சுக்கு,
மாலையில் கடுக்காய்,
மண்டலம் உண்டால் ,
கோல் ஊன்றிய கிழவனும்,
குமாரனாகி விடுவான் !