Thursday, July 5, 2012

green tea tamil language,உடல் இளைக்க கிரீன் டீ,green tea in tamil, green tea for weight loss tamil,green tea benefits in tamil,green tea uses in tamil,கிரீன் டி எதற்கு பயன்படுகிறது

1.கிரீன் டீ  நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது  வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது  குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள  கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .

4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட  வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .


கிரீன் டீ-யின்  பயன்கள் :
  • கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
  • சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
  • இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
  • எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
  • முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
  • சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
  • குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
  • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
  • எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
  • சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.




Friday, June 15, 2012

காய்கறிகளும் உடல் எடையை குறைக்குமா? காய்கறி,காய்கறிகளின் பயன்கள்,காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் உடல் இளைக்குமா?

1.கேரட்டில் வைட்டமின் A , வைட்டமின் K  மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது .
2. சர்க்கரை வள்ளி கிழங்கு-இரும்புசத்து ,நார்சத்து,கால்சியம் புரோட் டீன் போன்றவற்றிற்கு நல்ல மூலம் அதிக அளவிலான கரோட்டின் மற்றும் வைட்டமின் C - இரண்டு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் கொண்டுள்ளது.
3. காலிபிளவர் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும், நார்ச்சத்து உணவையும் கொண்டுள்ளது.
4. பசலை கீரை நிறைய மெக்னீசியம் , இரும்பு தாதுக்களையும்  மற்றும் வைட்டமின் A, C, மற்றும் E யும் கொண்டுள்ளது.
5. கீரைகள் - நிறைந்த வைட்டமின் C , பீட்டா கரோட்டின் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உள்ளது . 
6. சிவரிக்கீரை-பொட்டாசியம், வைட்டமின் A, C மற்றும்
கால்சியம்
நிறைந்தது .
7.வெங்காயம் - அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் போராடும் ஆண்டிஆக்சிடெண்ட் கொண்டுள்ளது. உடலில் தீமையான விளைவுகளை  நீக்கி உடல் செயல்பாடுகள் ஒழுங்குபட  செய்கிறது .




Saturday, June 9, 2012

கலோரி,கலோரிகள்,கலோரி உணவு,கலோரி food,calories in tamilnadu food items

 நாம் உண்ணக்கூடிய ஒவ்வொரு உணவிலும் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் அல்லது கலோரி இருக்கிறது ."கலோரி" என்பது வெப்பத்தை அளக்கக்கூடிய ஓர் அலகாகும். அதாவது,   ஒரு கிராம் ( 1g ) நீரின் வெப்பநிலையை ஒரு  சென்டிகிரேடு
  ( 1°C ) அளவிற்கு உயர்த்துவதற்கு பயன்படும்  ஆற்றல் ஒரு  "கலோரி" எனப்படும். செல்சியஸ் பொதுவாக சென்டிகிரேடு என அழைக்கபடுகிறது.இந்த கலோரியானது உயிர் வாழ தேவையான அனைத்து விதமான  உடல் வளர்சிதை மாற்ற செயல்களுக்கும் மற்றும் இயக்கத்திற்கும் பயன்படுகிறது.

Friday, May 18, 2012

ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

 உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

   1. மன அழுத்தம், 
    2.மரபியல் காரணிகளான ஜீன்,  
    3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,
   4.ஒழுங்கற்ற செரிமானம்,
   5.அதிகமாக சாப்பிடுதல்,
  6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,
  7.சுறுசுறுப்பின்மை,உழைப்பின்மை,
  8.உடற்பயிற்சி இல்லாமை,
  9.உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,
 10.சரியான தூக்கமின்மையும்,
 11.அதிகளவு கொழுப்பு ,சர்க்கரை(சாதம்)உணவுகளை சாப்பிடுவதாலும்,
 12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவையும் காரணமாகின்றன.  
 13.நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது
  14 .தேவையற்ற நேரங்களில்  தேனீர் அருந்துவது 
  15. உடலில்  தேவையற்ற கழிவுபொருட்கள்  அதிகமாக சேர்ந்து இருப்பதும்   உடல் எடை கூடுவதற்கான காரணமாகும் .

பழங்கள் உடல் எடையைக் குறைக்குமா? fat loss fruits in tamil

 ஆம்! பழங்கள் உடல் கொழுப்பை கரைக்கவும்,உடல் எடை குறைக்கவும் உதவுகின்றது.
            காலை   உணவு  சிட்ரிக் அமிலம் நிறைந்த பழத்துடன் அல்லது வைட்டமின் C  நிறைந்த பழத்துடன் துவங்குவது நல்லது . இப்படி செய்வது கொழுப்பை கரைப்பதர்க்கு சிறந்த வழியாக அமையும்.

1. திராட்சைப்பழம்
2. ஆப்பிள்கள் 

3. ஆரஞ்சு
4. வாழைப்பழங்கள்
5. ஸ்ட்ராபெர்ரிகள்
6. அன்னாசிபழம்
7. எலுமிச்சை பழம்  
8. தக்காளி 
9. பிளம்ஸ்
10.பப்பாளி
11. மாதுளை
12.  மாம்பழம்
13. சப்போட்டா

  மேல்கூறிய பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் இருப்பதால்  உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கவும்  பயன்படுகிறது.

quick fat loss tips tamil வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டுமா?